» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
காவலர்கள் தாக்கியதில் மூதாட்டி உயிரிழப்பு? : கன்னியாகுமரி அருகே பரபரப்பு
செவ்வாய் 29, ஜூலை 2025 3:58:54 PM (IST)
கன்னியாகுமரி அருகே காவலர்கள் தாக்கியதில் மூதாட்டி உயிரிழந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மத்திகோடு பகுதியை சேர்ந்த சூசைமரியாள் (80), இவரது பேரனை ஒருவழக்கு சம்மந்தமாக கைது செய்வதற்கு நான்கு காவலர்கள் ஆதிகிலையில் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது மூதாட்டியின் பேரனை காவலர்கள் இழுத்து வரும் போது சூசைமரியாள் எனது பேரனை விடுங்கள் எதற்காக இழுத்து செல்கிறீர்கள் என்று கேட்ட போது வயதான மூதாட்டி என்றும் பாராமல் 4 காவலர்களும் அவரை பிடித்து கீழே தள்ளி போட்டு தரையில் இழுத்து காலால் உதைத்துள்ளனர்.
இதனால் சூசைமரியாள் படுகாயம் அடைந்துள்ளார். இதனையடுத்து அவரது மருமகள் சந்திரகலா 108 ஆம்புலன்ஸை அழைத்து குளச்சல் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு பரிசோதித்த மருத்துவர் மூதட்டி சூசைமரியாள் உயிரிழந்துள்ளார் என்று தெரிவித்துள்ளார். ஆகவே மூதாட்டியை கொடுரமான முறையில் தாக்கி கொலை செய்த நான்கு காவலர்களையும் கைது செய்து குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் அதுவரை உடலை வாங்கமாட்டோம் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சதாவதானி செய்குதம்பி பாவலர் 151-வது பிறந்த நாள்: ஆட்சியர் மரியாதை செலுத்தினார்!
வியாழன் 31, ஜூலை 2025 12:41:20 PM (IST)

குமரி கடற்கரை கிராமங்களை பாதுகாக்க சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும்: விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை!
புதன் 30, ஜூலை 2025 8:23:14 PM (IST)

தூய்மை பணியாளர்களின் அர்ப்பணிப்பு மிகவும் மதிக்கதக்கது: நல வாரிய தலைவர் பெருமிதம்
புதன் 30, ஜூலை 2025 4:08:50 PM (IST)

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் ஆடி மாத நிறை புத்தரிசி பூஜை
புதன் 30, ஜூலை 2025 4:01:09 PM (IST)

நாகர்கோவில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரம் முறிந்து விழுந்தது!
புதன் 30, ஜூலை 2025 11:13:01 AM (IST)

பத்மநாபபுரம் தொகுதியில் ரூ.2.79 கோடி மதிப்பில் சாலை மறுசீரமைப்பு பணிகள் தொடக்கம்!
செவ்வாய் 29, ஜூலை 2025 5:36:45 PM (IST)
