» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
ஆசிரியர் பிரம்பால் அடித்ததால் பத்தாம் வகுப்பு மாணவன் தூக்கு போட்டு தற்கொலை..!
செவ்வாய் 24, ஜூன் 2025 10:58:49 AM (IST)
திருச்செந்தூர் அருகே ஆசிரியர் பிரம்பால் அடித்ததால் பத்தாம் வகுப்பு மாணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள பரமன்குறிச்சியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் மகன் முத்து கிருஷ்ணன் (15), அங்குள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று பள்ளியில் தலைமை ஆசிரியர் சக்தி ஞானசுந்தரி என்பவர் பிரம்பால் அடித்தாராம். இதையடுத்து பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்ற மாணவன் தனது பெற்றோரிடம் தலைமை ஆசிரியை தன்னை பிரம்பால் அடித்ததாக கூறியுள்ளார்.
இதனால் பெற்றோர்கள் நாளை பள்ளிக்கு வந்து என்ன என்று விசாரிக்கிறோம் என்று கூறினார்களாம். இந்த நிலையில் நேற்று 8 எட்டு மணியளவில் முத்துக் கிருஷ்ணன் வீட்டின் படுக்கைறயைில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த திருச்செந்தூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவனின் உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
மக்கள் கருத்து
80 kids ஒருவன்Jun 24, 2025 - 11:04:32 AM | Posted IP 172.7*****
நானே நிறைய பிரம்பு அடி வாங்கிட்டு அமைதியாக இருக்கேன், இன்றைய சில 2k கிடஸ் ஐ கண்டால் பயங்கரமாக இருக்கே.
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்டத்தில் 3 அரசியல் கட்சிகளின் அங்கீகாரம் ரத்து : தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
செவ்வாய் 1, ஜூலை 2025 10:49:52 AM (IST)

இஸ்ரோ இன்ஜினியர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை: குடும்ப பிரச்சினையால் விபரீத முடிவு!
செவ்வாய் 1, ஜூலை 2025 8:34:20 AM (IST)

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை கால நீடிப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 5:48:59 PM (IST)

தனியார் மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு!
திங்கள் 30, ஜூன் 2025 4:04:27 PM (IST)

இணையதளம் மூலமாக மட்டுமே சுகாதார சான்றிதழ் வழங்கப்படும் : ஆட்சியர் தகவல்
திங்கள் 30, ஜூன் 2025 12:19:27 PM (IST)

மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவர்
ஞாயிறு 29, ஜூன் 2025 11:28:11 AM (IST)

90s kidJun 24, 2025 - 11:24:04 AM | Posted IP 172.7*****