» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு : ஆட்சியர் தகவல்
திங்கள் 23, ஜூன் 2025 12:09:22 PM (IST)
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆசிரியர் பணியிடத்திற்கு தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கிவரும் கலிங்கராஜபுரம் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் காலியாகவுள்ள ஒரு வேதியியல் (Chemistry) பட முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கு மாதம் ரூ.18,000/- (பதினெட்டாயிரம் மட்டும்) என்ற மாத தொகுப்பூதியத்திலும்,
காலியாக உள்ள ஒரு இடைநிலை அசிரியர் பணியிடத்திற்கு மாதம் ரூ.12000/- (பன்னிரெண்டாயிரம் மட்டும்) தொகுப்பூதியத்திலும், மற்றும் வாழையத்துவயல் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் காலியாகவுள்ள ஒரு பட்டதாரி ஆசிரியர் சமூக அறிவியல் (Social Science) பணியிடத்திற்கு மாதம் ரூ.15,000/-(பதினைந்தாயிரம் மட்டும்) என்ற மாத தொகுப்பூதியத்திலும் முற்றிலும் தற்காலிகமாக ஆசிரியரை நியமித்திட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலிப்பணியிடங்களில் தற்காலிகமாக நிரப்பப்படும் ஆசிரியர், ஆசிரியர் தேர்வு வாரியம் / பதவி உயர்வு மூலம் நிரப்பிடும் வரை அல்லது இக்கல்வியாண்டில் எது முன்னரோ அது வரையில் பணியமர்த்தப்படுவர். பள்ளி மேலாண்மை குழு மூலம் நியமனம் செய்யப்படும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடத்திற்கு முதுகலை பட்டத்தாரி ஆசிரியருக்கான தற்போது நடைமுறையில் உள்ள அரசு விதிமுறைகளில் உள்ளவாறு கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.
ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கும் போது வரையறுக்கப்பட்ட கல்வி தகுதிகளுடன் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிப்பார்ப்பில் கலந்து கொண்டவர்களுக்கும், அவ்வாறு இல்லையெனில் இல்லம் தேடிக் கல்வித்திட்டத்தில் தன்னார்வலராக பணிபுரியும் தகுதி வாய்ந்த தன்னார்வலர்க்கும். பள்ளி அமைந்துள்ள பகுதி மற்றும் அதன் அருகில் உள்ளவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும்.
மேலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் பட்டதாரி ஆசிரியர்கள் பள்ளி மேலாண்மை குழுமூலம் நிரப்பப்படும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு (TET PAPER -II) தேர்ச்சி பெற்ற பணிநாடுநர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவர் இடைநிலை ஆசிரியர் பணிக்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்படும் அசிரியர்கள் ஆசிரியர் தகுதித்தேர்வு (தாள்-1) TET Paper | தேர்ச்சி பெற்ற பணி நாடுநர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவர்.
இப்பணிகளுக்கான தகுதி வாய்ந்த நபர்கள் சம்மந்தப்பட்ட பள்ளி மேலாண்மை குழு மூலம் தேர்வு செய்யப்படுவர். இப்பணி நியமனம் முற்றிலும் தற்காலிகமானது. தற்காலிக பணிக்கு தகுதியுள்ள விண்ணப்பத்தாரர்கள் 24.06.2025 முதல் 26.06.2025-க்குள் கன்னியாகுமரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் உரிய சான்றுகளுடன் நேரடியாகவோ, பதிவஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்டத்தில் 3 அரசியல் கட்சிகளின் அங்கீகாரம் ரத்து : தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
செவ்வாய் 1, ஜூலை 2025 10:49:52 AM (IST)

இஸ்ரோ இன்ஜினியர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை: குடும்ப பிரச்சினையால் விபரீத முடிவு!
செவ்வாய் 1, ஜூலை 2025 8:34:20 AM (IST)

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை கால நீடிப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 5:48:59 PM (IST)

தனியார் மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு!
திங்கள் 30, ஜூன் 2025 4:04:27 PM (IST)

இணையதளம் மூலமாக மட்டுமே சுகாதார சான்றிதழ் வழங்கப்படும் : ஆட்சியர் தகவல்
திங்கள் 30, ஜூன் 2025 12:19:27 PM (IST)

மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவர்
ஞாயிறு 29, ஜூன் 2025 11:28:11 AM (IST)
