» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 2½ பவுன் செயின் பறிப்பு : மர்ம நபர் கைவரிசை!
திங்கள் 23, ஜூன் 2025 11:25:36 AM (IST)
இரணியல் அருகே ஓடும் பஸ்சில் கூட்டநெரிசலை பயன்படுத்தி மூதாட்டியிடம் 2½ பவுன் தங்கச் செயினை பறித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
குமரி மாவட்டம் இரணியல் அருகே நெய்யூர் மாங்குழி பகுதியை சேர்ந்தவர் தனிஸ்லாஸ். இவருடைய மனைவி மேரி ஏஞ்சல் (70). இவர் சம்பவத்தன்று ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு மருந்து வாங்க சென்றார். பின்னர் நாகர்கோவிலில் இருந்து திருநைனார்குறிச்சி வழியாக திங்கள்சந்தைக்கு செல்லும் பஸ்சில் ஏறி ஊருக்கு சென்று கொண்டிருந்தார்.
அந்த பஸ் மூங்கில்விளை பகுதியில் சென்றபோது, மேரி ஏஞ்சல் தனது கழுத்தில் கிடந்த 2½ பவுன் செயின் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே பஸ்சை நிறுத்தும்படி கண்டக்டரிடம் கூறினார். இதையடுத்து டிரைவர் பஸ்சை நிறுத்தினார். அதைதொடர்ந்து பஸ் முழுவதும் மேரி ஏஞ்சல் தேடிப்பார்த்தார். ஆனாலும், நகை கிடைக்கவில்லை.
பஸ்சில் கூட்டநெரிசலை பயன்படுத்தி யாரோ மர்ம ஆசாமி மேரி ஏஞ்சலிடம் நகை அபேஸ் செய்துவட்டு தப்பி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து மேரி ஏஞ்சல் மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரேஷன் கடையில் ஆட்சியர் அழகுமீனா திடீர் ஆய்வு
திங்கள் 14, ஜூலை 2025 12:02:27 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் 120 தேர்வு மையங்களில் குரூப் 4 தேர்வு : ஆட்சியர் அழகுமீனா ஆய்வு
சனி 12, ஜூலை 2025 5:23:30 PM (IST)

குமரி மாவட்டத்தில் வளர்ச்சித்திட்ட பணிகளை விரைந்து முடித்திட அமைச்சர் அறிவுறுத்தல்!
வெள்ளி 11, ஜூலை 2025 10:50:26 AM (IST)

திருவனந்தபுரம் - திருநெல்வேலி நேரடி பயணிகள் ரயில்கள் இயக்க கோரிக்கை
வியாழன் 10, ஜூலை 2025 5:21:07 PM (IST)

குமரி மாவட்டத்தில் 8 நாட்களில் 10 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு!!
புதன் 9, ஜூலை 2025 8:26:11 PM (IST)

விரிகோடு ரயில்வே கேட் வழியாக மேம்பாலம் அமைக்கப்படும்: விஜய் வசந்த் எம்.பி. உறுதி!!
புதன் 9, ஜூலை 2025 8:22:21 PM (IST)
