» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
வ.உ.சி. துறைமுகம் சரக்கு கையாளுவதில் புதிய சாதனை
திங்கள் 23, ஜூன் 2025 8:27:45 AM (IST)
தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம் சரக்கு கையாளுவதில் புதிய சாதனை படைத்து உள்ளது.
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு பல்வேறு நாடுகளில் இருந்து சரக்குகள் இறக்குமதி செய்யப்படுகிறது. அதே போன்று வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் அதிக அளவில் நடந்து வருகின்றன. இந்த துறைமுகம் கடந்த மே மாதம் வரை 20 லட்சத்து 26 ஆயிரத்து 544 டன் நிலக்கரியை கையாண்டு உள்ளது. இது முந்தைய ஆண்டு இதே காலகட்டத்தில் கையாளப்பட்ட நிலக்கரியை விட 45.30 சதவீதம் அதிகம் ஆகும். கடந்த ஆண்டு 13 லட்சத்து 94 ஆயிரத்து 763 டன் நிலக்கரி கையாளப்பட்டு இருந்தது.
இதே போன்று கடந்த மே மாதம் வரை 3 லட்சத்து 62 ஆயிரத்து 248 டன் சுண்ணாம்பு கல்லை துறைமுகம் கையாண்டு சாதனை படைத்து உள்ளது. இது முந்தைய ஆண்டு இதே காலகட்டத்தில் கையாளப்பட்டதை விட 84.55 சதவீதம் அதிகம் ஆகும். கடந்த ஆண்டு 1 லட்சத்து 96 ஆயிரத்து 286 டன் கையாளப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையான அதிகரிப்பு சிமெண்ட் மற்றும் உரம் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் முக்கிய மூலப்பொருளான சுண்ணாம்புக்கல்லின் தடையற்ற வினியோகத்தை உறுதி செய்வதில் துறைமுகத்தின் பங்கை எடுத்துக்காட்டுகிறது என்று துறைமுக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்டத்தில் 3 அரசியல் கட்சிகளின் அங்கீகாரம் ரத்து : தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
செவ்வாய் 1, ஜூலை 2025 10:49:52 AM (IST)

இஸ்ரோ இன்ஜினியர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை: குடும்ப பிரச்சினையால் விபரீத முடிவு!
செவ்வாய் 1, ஜூலை 2025 8:34:20 AM (IST)

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை கால நீடிப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 5:48:59 PM (IST)

தனியார் மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு!
திங்கள் 30, ஜூன் 2025 4:04:27 PM (IST)

இணையதளம் மூலமாக மட்டுமே சுகாதார சான்றிதழ் வழங்கப்படும் : ஆட்சியர் தகவல்
திங்கள் 30, ஜூன் 2025 12:19:27 PM (IST)

மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவர்
ஞாயிறு 29, ஜூன் 2025 11:28:11 AM (IST)

A.Issac JebaJun 23, 2025 - 01:02:12 PM | Posted IP 104.2*****