» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கன்னியாகுமரி மாவட்ட பயணிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்ய கோரிக்கை!
வெள்ளி 20, ஜூன் 2025 3:21:15 PM (IST)
அந்தோதையா ரயில் 30 நாட்களுக்கு திருநெல்வேலியுடன் நிறுத்தம் செய்யப்படுவதால் கன்னியாகுமரி மாவட்ட பயணிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகர் நாகர்கோவில் அமைந்துள்ள நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம் 73 கோடிகளில் வருமானம் உள்ள என்எஸ்ஜி-3 வகை ரயில் நிலையம் ஆகும். நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரியிலிருந்து இயக்கப்படும் ரயில்களுக்கு நாகர்கோவில் ரயில் நிலையத்தில் வைத்து பிட்லைன் முதல் நிலை பராமரிப்பு, பிட்லைன் இரண்டாம் நிலை பராமரிப்பு, ரயில் பெட்டிகள் பழுதுபார்த்தல், ரயில்களை சுத்தம் செய்து தண்ணீர் பிடித்தல் என பல்வேறு கட்ட பணிகள் நடைபெறுகிறது. தற்போது நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் கடந்த இரண்டு வருடமாக பல்வேறு முனைய விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது.
நாகர்கோவில் முனைய விரிவாக்க பணிகளுக்காக வேண்டி ரயில்வே துறை நாகர்கோவில் - தாம்பரம் அந்தியோதயா ரயிலை 30 நாட்களுக்கு அதாவது 23 ஜூன் முதல் 22 ஜுலை வரை ரத்து செய்து திருநெல்வேலியுடன் நிறுத்தியுள்ளது. அந்தோதையா ரயில் ரத்து செய்யப்பட்டதால் மாவட்டத்திலிருந்து குறைந்த கட்டணத்தில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் சென்னைக்கு செல்லும் ஏழை பயணிகளை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
அந்தியோதயா ரயில்கள் முற்றிலும் முன்பதிவு செய்யப்படாத பொது பெட்டிகள் கொண்டதாகும். இந்த ரயில்கள் அதிக பயணிகள் நெருக்கடி கொண்ட பாதைகளில் இயக்கப்படுகிறது. நாகர்கோவில் -தாம்பரம் அந்தியோதயா ரயில் 20 பெட்டிகளும் முன்பதிவில்லாத பெட்டிகள் கொண்ட ரயில்கள் ஆகும். இந்த அந்தியோதயா ரயில்களில் அதிக அளவில் முன்பதிவில்லாத பெட்டிகளை கொண்டு இரவு நேரத்தில் ரயில்கள் இயக்குவதால் தென் மாவட்டங்களிலிருந்து ஏழை பயணிகள் குறைந்த கட்டணத்தில் சென்னைக்கு சென்று வருகின்றனர்.
இனி அந்தோதையா ரயில் தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு திருநெல்வேலிக்கு காலை 10:55 மணிக்கு விட்டுவிட்டு அதே ரயில் பெட்டிகள் நடைமேடையில் நிறுத்திவைக்கப்பட்டு சுத்தம் செய்து அனைத்து பெட்டிகளில் தண்ணீர் பிடித்து விட்டு மாலை 05:10 மணிக்கு திருநெல்வேலி இருந்து புறப்பட்டு செல்லும். திருநெல்வேலி – நாகர்கோவில் மார்க்கம் இயக்கப்படாது.
ஒரு மார்க்கம் இணைப்பு ரயில்: இவ்வாறு இந்த அந்தோதையா ரயில் திருநெல்வேலியுடன் நிறுத்தம் செய்யும் போது சென்னையிலிருந்து இந்த ரயிலில் பயணம் செய்யும் கன்னியாகுமரி மாவட்ட பயணிகள் திருநெல்வேலி ரயில் நிலையத்தில் இறங்கி விட்டு அதன் பிறகு சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு அதாவது 12:00 மணிக்கு திருநெல்வேலி வரும் திருச்சி - திருவனந்தபுரம் இன்டர்சிட்டி ரயிலில் ஏறி நாகர்கோவில் மார்க்கம் பயணம் செய்யலாம். இது மாவட்ட பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் மறுமார்க்கமாக இவ்வாறு பயணம் செய்ய எந்த ஒரு இணைப்பு ரயில் வசதியும் இல்லை
இதைப்போல் மறுமார்க்கமாக திருநெல்வேலியிருந்து மாலை 05:10 மணிக்கு தாம்பரம் நோக்கி பயணம் செய்யும் அந்தோதையா ரயில் பயணம் செய்ய கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து திருநெல்வேலி சென்று அங்கிருந்து தாம்பரம் செல்லும் அந்தியோதயா ரயிலில் பயணம் செய்ய இணைப்பு ரயில் சேவையும் தற்போது இல்லை.
தற்போது முனைய விரிவாக்க பணிகளுக்காக நாகர்கோவில் - தாம்பரம் ரயில் இவ்வாறு தற்காலிகமாக 30 நாட்களுக்கு மட்டும் கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதைப்போல் இந்த அந்தோதையா ரயில் திருநெல்வேலியில் நிறுத்தப்படும் 30 நாட்களுக்கு மட்டும் கொல்லம் - கன்னியாகுமரி மெமு ரயிலை தற்காலிகமாக திருநெல்வேலி வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படுகிறது.
இது மட்டுமல்லாமல் திருச்சி - திருவனந்தபுரம் இன்டர்சிட்டி ரயிலை தற்காலிகமாக 30 நாட்களுக்கு மட்டும் இரணியல், ஆரல்வாய்மொழி, நாங்குநேரி ரயில் நிலையங்களில் நின்று செல்லவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு இரண்டு கோரிக்கைகளை நிறைவேற்றும் பட்சத்தில் அந்தோதையா ரயில் பயணம் செய்யும் பயணிகள் திருநெல்வேலி ரயில் நிலையத்தில் வந்து இறங்கி இரண்டு மார்க்கங்களிலும் பயணம் செய்ய முடியும்.
திருநெல்வேலியிருந்து அந்தோதையா ரயில் இணைப்பு ரயில்களில் பயணம் செய்ய பயணச்சீட்டு அந்தோதையா ரயிலுக்கு என்று கேட்டு பெற்றுக்கொள்ள வேண்டும். தற்போது அந்தோதையா ரயில் நிற்காமல் செல்லும் ரயில் நிலைய பயணிகள் பயணம் செய்ய ஏதுவாக ஒரே பயணச்சீட்டில் எடுப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும்.
இரணியல் ரயில் நிலையத்திலிருந்து மேமு ரயிலில் திருநெல்வேலி சென்று விட்டு அங்கிருந்து அந்தோதையா ரயில் பயணம் செய்ய இரணியல் ரயில் நிலையத்தில் ஒரே பயணச்சீட்டில் இரணியல் - தாம்பரம் அந்தோதையா ரயில் என்று பயண சீட்டு பெறுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது பயணிகள் திருநெல்வேலி ரயில் நிலையத்தில் இறங்கி பயணச்சீட்டு எடுப்பதற்கு என்று வெளியே செல்ல வேண்டாம். இதைப்போல் மறுமார்க்கமாக தாம்பரம் - இரணியல் அந்தோதையா ரயில் பயணச்சீட்டு எடுப்பதற்கு வழிவகை ஏற்படுத்த வேண்டும் என்று குமரி மாவட்ட பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்டத்தில் 3 அரசியல் கட்சிகளின் அங்கீகாரம் ரத்து : தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
செவ்வாய் 1, ஜூலை 2025 10:49:52 AM (IST)

இஸ்ரோ இன்ஜினியர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை: குடும்ப பிரச்சினையால் விபரீத முடிவு!
செவ்வாய் 1, ஜூலை 2025 8:34:20 AM (IST)

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை கால நீடிப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 5:48:59 PM (IST)

தனியார் மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு!
திங்கள் 30, ஜூன் 2025 4:04:27 PM (IST)

இணையதளம் மூலமாக மட்டுமே சுகாதார சான்றிதழ் வழங்கப்படும் : ஆட்சியர் தகவல்
திங்கள் 30, ஜூன் 2025 12:19:27 PM (IST)

மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவர்
ஞாயிறு 29, ஜூன் 2025 11:28:11 AM (IST)
