» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
ஜீவன் ரக்ஷா விருது பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர் தகவல்!
செவ்வாய் 17, ஜூன் 2025 4:09:21 PM (IST)
துணிச்சலோடு செயல்பட்டு உயிர்களை காப்பாற்றியோர், மத்திய அரசின் 2025-ஆம் ஆண்டிற்கான ஜீவன் ரக் ஷா விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் உள்துறை சார்பில் தைரியமான மற்றும் மனிதாபிமானம் மிக்க பணிகளைச்செய்து உயிர்காக்கும் முயற்சியில் ஈடுபட்டு மனித உயிர்களை காத்த நபர்களுக்கு ஜீவன் ரக்சா பதக் தொடர் விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது.
தைரியம் மிகுந்த மற்றும் மனிதாபிமானம் மிக்க பணிகளை தாமதமின்றி உடனடியாக செய்து தனது அசாத்திய திறமைகளால் நீரில் மூழ்கியவர்கள், நிலச்சரிவு விபத்து மற்றும் நெருப்பில் சிக்கி காயம் அடைந்தவர்கள், மின்சார சாதனங்களால் தாக்கப்பட்டு பாதிப்பு ஏற்பட்டவர்கள், விலங்கினங்களால் தாக்கப்பட்டவர்கள் மற்றும் சுரங்கங்களில் வேலை செய்யும் போது ஏற்படும் விபத்துக்களில் சிக்கியவர்களை உயர்காக்கும் முயற்சியில் ஈடுபட்ட தீரச்செயல்கள் புரிந்தவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. இவ்விருது பின்வருவனவற்றில் மூன்று பிரிவுகளாக வழங்கப்படுகிறது.
(1). சர்வோத்தம் ஜீவன் ரக்ஷா பதக்கம் - மீட்பவரின் உயிருக்கு மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் உயிரைக் காப்பாற்றுவதில் வெளிப்படையான தைரியத்திற்காக வழங்கப்படுகிறது.
(2). உத்தம் ஜீவன் ரக்ஷா பதக்கம் - மீட்பவரின் உயிருக்கு பெறும் ஆபத்தில் இருக்கும் சூழ்நிலையில் உயிரைக் காப்பாற்றுவதில் தைரியமான செயலுக்காக வழங்கப்படுகிறது.
(3).ஜீவன் ரக்ஷா பதக்கம் - மீட்பவருக்கு உடல் காயம் ஏற்பட்ட சூழ்நிலையில் உயிரைக் காப்பாற்றிய செயலுக்காக வழங்கப்படுகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கண்ட செயல்கள் மூலம் ஒருவரின் உயிரை மனதாபிமான குணத்துடன் காப்பாற்றி இருந்தால் 2025-ஆம் ஆண்டிற்கான ஜீவன் ரக்ஷா பதக்கம் விருது (Jeevan Raksha Padak Series)-க்கு விண்ணப்பிக்கலாம். 01.10.2023-க்கு முன்னர் இச்செயல்களை புரிந்தவர்களுக்கு பொருந்தாது.
ஆயுதப்படை பிரிவை சேர்ந்தோர் காவல் துறையின் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி சேவைத்துறையினர் ஆகியயோர் தம்முடைய பணிநேரத்தில் அல்லாமல் இத்தகைய சேவை புரிந்திருந்தால் விண்ணப்பிக்கலாம்.
மேலும் இச்செயல்களை புரிந்த தகுதிவாய்ந்த நபர்கள், மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பான விபரங்கள் மற்றும் மீட்கப்பட்டவரின் விபரங்களை சுயவிபர படிவத்தில் பூர்த்தி (அதிகபட்சம் 250 வார்த்தைகள்) செய்து அனுப்பவேண்டும். 22.07.2025 தேதிக்கு பின்வரும் விண்ணப்பங்கள் தகவலின்றி நிராகரிக்கப்படும். மேலும் விபரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக இணைப்பு கட்டிடத்தில் செயல்பட்டுவரும் மாவட்ட சமூகநல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்டத்தில் 3 அரசியல் கட்சிகளின் அங்கீகாரம் ரத்து : தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
செவ்வாய் 1, ஜூலை 2025 10:49:52 AM (IST)

இஸ்ரோ இன்ஜினியர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை: குடும்ப பிரச்சினையால் விபரீத முடிவு!
செவ்வாய் 1, ஜூலை 2025 8:34:20 AM (IST)

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை கால நீடிப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 5:48:59 PM (IST)

தனியார் மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு!
திங்கள் 30, ஜூன் 2025 4:04:27 PM (IST)

இணையதளம் மூலமாக மட்டுமே சுகாதார சான்றிதழ் வழங்கப்படும் : ஆட்சியர் தகவல்
திங்கள் 30, ஜூன் 2025 12:19:27 PM (IST)

மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவர்
ஞாயிறு 29, ஜூன் 2025 11:28:11 AM (IST)
