» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கருங்கல் பேருந்து நிலைய கட்டுமான பணிகளை ஆட்சியர் ஆர்.அழகுமீனா நேரில் ஆய்வு!
செவ்வாய் 17, ஜூன் 2025 4:01:12 PM (IST)

கருங்கல் பேருந்து நிலைய கட்டுமான பணிகளை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கன்னியாகுமரி மாவட்ட பேரூராட்சிகள் துறையின் சார்பில் கருங்கல் தேர்வுநிலை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் நடைபெற்றுவரும் கருங்கல் பேருந்து நிலைய கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, கிள்ளியூர் சட்டமன்ற செ.ராஜேஷ்குமார் முன்னிலையில் இன்று (17.06.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்:
தமிழ்நாடு முதலமைச்சர் கன்னியாகுமரி மாவட்டத்தின் வளர்ச்சிக்காக கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம், முதலமைச்சரின் சாலை உட்கட்டமைப்பு திட்டம் பல்வேறு திட்டப்பணிகளுக்கு நிதிஒதுக்கீடு செய்து, வளர்ச்சி திட்டப்பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார்கள். அதனடிப்படையில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.
கருங்கல் தேர்வு நிலை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் 2024-25- ன் கீழ் கருங்கல் பேருந்து நிலையம் மேம்பாடு செய்ய ரூ.5.22 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் இன்று கருங்கல் பேருந்து நிலைய கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டதொடு, இப்பணிகள் மேற்கொள்வதன் மூலம் அருகாமையில் உள்ள பேரூராட்சிகள், ஊராட்சி பகுதிகளில் உள்ள சுமார் 7000 மக்கள் தினசரி பயன்படுவார்கள்.
எனவே இப்பணிகளை துரிதமாக மேற்கொள்வதோடு, கட்டுமான பணிகள் தரமானதாகவும், உறுதி தன்மையினை உறுதி செய்திட ஒப்பந்ததாரர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தெரிவித்தார்.
ஆய்வின்போது பேரூராட்சிகள் உதவி இயக்குநர் இராமலிங்கம், கருங்கல் பேருராட்சி செயல் அலுவலர் சத்யதாஸ், கிள்ளியூர் தாசில்தார் ராஜசேகர், குளச்சல் துணை காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன், நெடுஞ்சாலை துறை உதவி செயற்பொறியாளர், துறை அலுவலர்கள், பணியாளர்கள், பொதுமக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரேஷன் கடையில் ஆட்சியர் அழகுமீனா திடீர் ஆய்வு
திங்கள் 14, ஜூலை 2025 12:02:27 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் 120 தேர்வு மையங்களில் குரூப் 4 தேர்வு : ஆட்சியர் அழகுமீனா ஆய்வு
சனி 12, ஜூலை 2025 5:23:30 PM (IST)

குமரி மாவட்டத்தில் வளர்ச்சித்திட்ட பணிகளை விரைந்து முடித்திட அமைச்சர் அறிவுறுத்தல்!
வெள்ளி 11, ஜூலை 2025 10:50:26 AM (IST)

திருவனந்தபுரம் - திருநெல்வேலி நேரடி பயணிகள் ரயில்கள் இயக்க கோரிக்கை
வியாழன் 10, ஜூலை 2025 5:21:07 PM (IST)

குமரி மாவட்டத்தில் 8 நாட்களில் 10 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு!!
புதன் 9, ஜூலை 2025 8:26:11 PM (IST)

விரிகோடு ரயில்வே கேட் வழியாக மேம்பாலம் அமைக்கப்படும்: விஜய் வசந்த் எம்.பி. உறுதி!!
புதன் 9, ஜூலை 2025 8:22:21 PM (IST)
