» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கொடி நாள் நன்கொடை வசூல்: குமரி மாவட்ட ஆட்சியருக்கு ஆளுநர் பாராட்டு சான்றிதழ்!

திங்கள் 5, மே 2025 4:37:05 PM (IST)



தாம்பரம் மாநகராட்சி ஆணையாளராக பணியாற்றியபோது, கொடி நாள் நன்கொடை இலக்கினையும் தாண்டி பெற்றுத்தந்ததற்கு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியருக்கு ஆளுநரின் வெள்ளிபதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. 

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (05.05.2025) நடைபெற்றது. இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், பொது மக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 421 கோரிக்கை மனுக்கள் இன்று பெறப்பட்டது. பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட அனைத்து கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து தீர்வு காணுமாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

அதனைத்தொடர்ந்து படைவீரர் கொடிநாள் நன்கொடை வாயிலாகப் பெறப்படும் நிதி முன்னாள் படைவீரர் மற்றும் அவர்களை சார்ந்தோர்களின் மறுவாழ்விற்காக அரசால் வகுக்கப்பட்ட திட்டங்களுக்கு செலவிடப்படுகிறது. இந்நிதி திரட்டுவதில் அரசு அலுவலர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடனும் முனைப்புடனும் செயல்படுகிறார்கள். இவ்வாறு பெற்று வழங்கப்படும் நன்கொடை ரூ.3 இலட்சத்திற்கு மேல் இருந்தால் அரசு தலைமை செயலாளர் அவர்களாலும், ரூ.5 இலட்சத்திற்கு மேலு; இருந்து மேதகு ஆளுநர் அவர்களாலும் பாராட்டு சான்றிதழ் மற்றும் வெள்ளிப்பதக்கம் வழங்கி அதற்;கு காரணமாக இருந்த அரசு அலுவலர்கள் கௌரவிக்கப்படுவார்கள்.

அதனடிப்படையில் நம்முடைய மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, 2022-2023 ஆண்டில் சென்னை தாம்பரம் மாநகராட்சி ஆணையாளராகப் பணியாற்றும் போது ரூ.20.60 இலட்சம் கொடி நாள் நன்கொடை பெற்று படைவீரர் கொடிநாள் நிதி கணக்கில் வழங்கியுள்ளார்கள். அவர்களை கௌரவிக்கும் விதமாக மேதகு ஆளுநர் அவர்களால் பாராட்டு சான்றிதழ் மற்றும் வெள்ளிப்பதக்கம் பெறப்பட்டுள்ளது. அதனை இன்று மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, அவர்களிடம் ஒப்படைத்தார்கள்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு, பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினய்குமார் மீனா, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் செல்வி.எஸ்.காளீஸ்வரி, தனித்துணை ஆட்சியர் சமூகபாதுகாப்பு திட்டம் சேக்அப்துல் காதர், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் செந்தூர் ராஜன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதியழகன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சிவகாமி, துணை இயக்குநர் முன்னாள் படைவீரர் நலன் மேஜர் ஜெயகுமார், உதவி இயக்குநர் (மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை) ஈஸ்வரநாதன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) பத்மபிரியா, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மோகனா, சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை செயற்பொறியாளர் பாரதி, துறை அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory