» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
அரசு அதிகாரிகளை பணிசெய்யவிடாமல் தடுத்த எம்எல்ஏ உள்பட 3 பேருக்கு தலா 3 மாதம் சிறை!
புதன் 23, ஏப்ரல் 2025 12:48:23 PM (IST)
அரசு அதிகாரிகளைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் கிள்ளியூா் எம்எல்ஏ உள்பட 3 பேருக்கு தலா 3 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம், மேல்மிடாலம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஜோசப். இவரது மகன் பால்ராஜ். இவா்கள் தங்களது வீட்டை விரிவுபடுத்தி கட்டினா். வீட்டின் விரிவாக்கப் பகுதி அரசுப் புறம்போக்கு நிலம் என்பதால் அதனை அகற்றுமாறு ஜோசப்புக்கு வருவாய்த் துறை சாா்பில் அறிவிப்பாணை வழங்கப்பட்டது.
ஆனால், ஆக்கிரமிப்பு இடத்தை அவா்கள் அகற்றாததால், கடந்த 2014-ஆம் ஆண்டு வருவாய்த் துறை சாா்பில், வட்டாட்சியா், கிராம நிா்வாக அலுவலா் உள்ளிட்ட அலுவலா்கள் வீட்டின் விரிவாக்க பகுதியை, இடித்து அப்புறப்படுத்துவதற்காக ஜேசிபி இயந்திரத்தை கொண்டு சென்றனா்.
அப்போது அப்பகுதிக்கு வந்த ராஜேஸ்குமாா் எம்எல்ஏ, ஆமோஸ், ஜோசப், பால்ராஜ், அவரது மனைவி சுபிதா மற்றும் பிரிட்டோ ஆகிய 6 போ் ஆக்கிமிப்பு அகற்றுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பணியைத் தடுத்தனா். இதுகுறித்து வருவாய்த் துறை அதிகாரிகள் கருங்கல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் ராஜேஸ்குமாா் எம்எல்ஏ உள்பட 6 போ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதுகுறித்த வழக்கு நாகா்கோவில் கூடுதல் சாா்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. விசாரணையின்போதே ஜோசப், பால்ராஜ், பிரிட்டோ ஆகியோா் இறந்துவிட்டனா். வழக்கை விசாரித்த நீதிபதி அசன்முகமது, அரசு அதிகாரியை பணி செய்யவிடாமல் தடுத்ததற்காக ராஜேஸ்குமாா் எம்எல்ஏ, ஆமோஸ், சுபிதா ஆகிய 3 பேருக்கும் தலா 3 மாதங்கள் சிறை தண்டனை, தலா ரூ.100 அபராதம் விதித்து தீா்ப்பு கூறினாா். இவ்வழக்கில் அரசு சாா்பில் சிறப்பு வக்கில் ஹொ்குலிஸ் ஆஜராகி வாதாடினாா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் சித்திரை தெப்ப திருவிழா ஏப்.28-ம் தேதி துவக்கம்!
சனி 26, ஏப்ரல் 2025 11:06:05 AM (IST)

கோணம் பட்டுவளர்ச்சி செயல்முறை பயிற்சி நிலையத்தில் ஆட்சியர் அழகுமீனா ஆய்வு!
வெள்ளி 25, ஏப்ரல் 2025 5:48:20 PM (IST)

நெல்லை சட்டக்கல்லூரியை குமரி மாவட்ட மக்கள் பயன்படுத்த வேண்டும்: அமைச்சர் ரகுபதி
வெள்ளி 25, ஏப்ரல் 2025 12:24:29 PM (IST)

நாகர்கோவிலில் மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்!
வெள்ளி 25, ஏப்ரல் 2025 10:30:25 AM (IST)

நீர்நிலை சீரமைப்பு பணிகளை மே மாதத்திற்குள் முடிக்க வேண்டும்: கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தல்
வியாழன் 24, ஏப்ரல் 2025 4:01:14 PM (IST)

மும்பை - குமரி இடையே கோடை சிறப்பு ரயில் : தெற்கு ரயில்வே அறிவிப்பு!
புதன் 23, ஏப்ரல் 2025 4:18:04 PM (IST)
