» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
மும்பை-கன்னியாகுமரி இடையே நெல்லை வழியாக கோடைகால சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
வெள்ளி 28, மார்ச் 2025 8:50:37 AM (IST)
கோடைகால விடுமுறையையொட்டி மும்பை- கன்னியாகுமரி இடையே நெல்லை வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக மத்திய ரயில்வே அறிவித்துள்ளது.
மத்திய ரயில்வே கோடைகால விடுமுறையையொட்டி மும்பையில் இருந்து கன்னியாகுமரிக்கு நெல்லை வழியாக சிறப்பு ரயில்களை இயக்க உள்ளது. மும்பை சி.எஸ்.எம்.டி.- கன்னியாகுமரி இடையே ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இதுபற்றி மத்திய ரயில்வே விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: மும்பை சி.எஸ்.எம்.டியில் இருந்து ஏப்ரல் 9-ந் தேதி முதல் ஜூன் 25-ந் தேதி வரை வாராந்திர சிறப்பு ரயில் புதன்கிழமைதோறும் அதிகாலை 12.30 மணிக்கு புறப்பட்டு மறுநாளான வியாழக்கிழமை மதியம் 1.15 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும். மறுமார்க்கத்தில் கன்னியாகுமரியில் இருந்து மும்பை சி.எஸ்.எம்.டி.க்கு ஏப்ரல் 10-ந்தேதி முதல் ஜூன் 26-ந் தேதி வரையில் இயக்கப்படுகிறது.
இந்த சிறப்பு ரயில் வாரத்தின் ஒவ்வொரு வியாழக்கிழமையும் பிற்பகல் 3.30 மணிக்கு புறப்பட்டு 3-வது நாளான சனிக்கிழமை அதிகாலை 4.15 மணிக்கு மும்பை சி.எஸ்.எம்.டி. வந்துசேரும்.
இந்த சிறப்பு ரயில் தாதர், கல்யாண், லோனாவாலா, புனே, தவுண்ட், குருத்வாடி, சோலாப்பூர், கலபுர்கி, வாடி, கிருஷ்ணா, ராய்ச்சூர், மந்திராலயம் ரோடு, குண்டக்கல், ஆனந்தபூர், தர்மாவரம், எலகங்கா, கிருஷ்ணாராஜபுரம், பங்காருபேட்டை, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, நெல்லை, வள்ளியூர், நாகர்கோவில் ஆகிய ரயில் நிலையங்களில் நின்றுசெல்லும்.
இந்த ரயிலில் இரண்டு அடுக்கு குளிர்சாதன பெட்டிகள்-4, மூன்று அடுக்கு குளிர்சாதன பெட்டிகள்- 6, முன்பதிவு படுக்கை பெட்டிகள்-4, மற்றும் பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சொத்து மதிப்பு சான்று வழங்க ரூ.3ஆயிரம் லஞ்சம் : கிராம நிர்வாக அலுவலர், உதவியாளர் கைது!
புதன் 2, ஏப்ரல் 2025 4:46:47 PM (IST)

குமரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
புதன் 2, ஏப்ரல் 2025 3:19:25 PM (IST)

கூட்டுறவு பண்டகச்சாலை குடோனில் ஆட்சியர் திடீர் ஆய்வு
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 3:26:14 PM (IST)

தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசார் குறியீடு: மத்திய அரசு அறிவிப்பு!
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 12:52:35 PM (IST)

பத்துகாணி மலைவாழ் மக்களின் வசதிக்காக இலவச ஆம்புலன்ஸ் சேவை துவக்கம்
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 12:18:42 PM (IST)

கேரள முதல்வர் பினராயி விஜயன் குமரி வருகை : ஆட்சியர் ஆர்.அழகுமீனா வரவேற்பு
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 12:07:52 PM (IST)
