» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

செல்போனில் சார்ஜ் போட்டபோது மின்சாரம் தாக்கி மாணவி சாவு

திங்கள் 24, மார்ச் 2025 8:42:02 AM (IST)

செல்போனில் ‘சார்ஜ்' போட்டபோது மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை எர்ணாவூர் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் முகுந்தன். ஆட்டோ டிரைவர். அவரது மனைவி விஜயா. இவர்களுக்கு அனிதா (வயது 14), எழில்மதி (7) ஆகிய 2 மகள்கள் உண்டு. அனிதா அங்குள்ள அரசு உயர்நிலை நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு தாய் விஜயா மற்றும் மகள் எழில்மதி ஆகிய இருவரும் மளிகை பொருட்கள் வாங்க கடைக்கு சென்று இருந்தனர். 

வீட்டில் தனியாக இருந்த அனிதா பொதுத்தேர்வுக்கு படித்து கொண்டிருந்ததாக தெரிகிறது. அந்த நேரத்தில் அனிதா வீட்டிலிருந்த செல்போனை எடுத்து ‘சார்ஜ்' போடுவதற்காக ஈரமான கையால் ஸ்விட்சை அழுத்தியுள்ளார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கியதில் அலறியபடி அனிதா மயங்கி கீழே விழுந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வீட்டுக்குள் ஓடி வந்தனர். அப்போது அனிதா சுயநினைவு இல்லாமல் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து தாய் விஜயாவுக்கு உடனடியாக செல்போன் மூலம் தகவல் அளித்தனர். பின்னர், அனிதாவை உடனடியாக மீட்டு, சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதைகேட்டு மாணவி அனிதாவின் பெற்றோர் கதறி அழுதனர். போலீசார் அனிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து எண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சென்னையில் செல்போனுக்கு ‘சார்ஜ்' போட்டபோது மின்சாரம் தாக்கி பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory