» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கிருஷ்ணன்கோவில் நியாயவிலைக்கடையில் ஆட்சியர் ஆர்.அழகுமீனா திடீர் ஆய்வு

புதன் 19, மார்ச் 2025 5:07:27 PM (IST)



கிருஷ்ணன்கோவில் நியாயவிலைக்கடையில் குமரி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். 

பின்னர் அவர் தெரிவிக்கையில்-கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்பட்டுவரும் நியாயவிலைக்கடைகளுக்கு கிட்டங்கிகளில் இருந்து வழங்கப்படும் உணவுப்பொருட்கள் எடை குறைவாக அனுப்பப்படுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியவந்ததன் அடிப்படையில் இன்று வடசேரி கூட்டுறவு பண்டகசாலைக்கு கீழ் செயல்படும் கிருஷ்ணன்கோவில் நியாயவிலைக்கடையில் நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

அங்கு பொதுமக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்களான அரசி, பாமாயில், சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட பொருட்களின் இருப்புகள் மற்றும் பொருட்களின் தரம் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் நியாயவிலைக்கடையின் குடும்ப அட்டைத்தாரர்களின் எண்ணிக்கை கேட்டறியப்பட்டது. குடும்ப அட்டைத்தாரர்கள் விரல் ரேகை பதிவு செய்வது நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

தொடர்ந்து நியாயவிலைக்கடையில் பணிசெய்யும் பணியாளர்களிடம் எடை குறைவாக விற்பனை செய்வதையும், போலி பட்டியல்கள் மூலம் பொருட்கள் விற்பனை நடைபெறாமல் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு மட்டும் பொருட்களை விநியோகம் செய்ய வேண்டும் எனவும், விதிமீறல்கள் நடைபெறுகிறது என குற்றச்சாட்டுகள் வரப்பெற்றால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தெரிவித்தார். 

ஆய்வில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சிவகாமி, துறை அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory