» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

டாஸ்மாக் கடை முன்பு முதல்வர் ஸ்டாலின் படம் மாட்டிய பாஜகவினர்: தூத்துக்குடியில் பரபரப்பு!

புதன் 19, மார்ச் 2025 4:42:39 PM (IST)

தூத்துக்குடியில் டாஸ்மாக் கடை முன்பு முதல்வர் ஸ்டாலின் படத்தை வைக்க முயன்ற பாஜகவினரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில் முதல் குற்றவாளி முதல்வர் ஸ்டாலின்தான் என்றும் டாஸ்மாக் கடைகளில் முதல்வர் ஸ்டாலின் படத்தை ஒட்டுவோம் என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார். இந்த நிலையில், தூத்துக்குடி இரண்டாம் ரயில்வே கேட் அருகில் உள்ள டாஸ்மாக் மதுபான கடை முன்பு தமிழக முதல்வர் ஸ்டாலின் படத்தை பாஜகவினர் வைக்க முயன்றனர்.

இதில், தூத்துக்குடி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மகளிர் அணிபொதுச் செயலாளர் லதா, கிழக்கு மண்டல துணைத் தலைவர் வேல்கனி கொரைரா, ஆன்மீக பிரிவு மாவட்ட தலைவர் ஓம் பிரபு ஆகிய மூன்று பேரை வடபாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாலமுருகன் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


மக்கள் கருத்து

உண்மMar 19, 2025 - 05:39:21 PM | Posted IP 162.1*****

சாராய ஆலைகள் எல்லாம் அரசியல்வாதிகளுடையது, எல்லாம் உண்மைதான்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory