» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பிளஸ் 2 மாணவருடன் பள்ளி மாணவி ஓட்டம்? குமரி அருகே பரபரப்பு

வியாழன் 8, மே 2025 5:24:43 PM (IST)

குமரி அருகே இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமான பிளஸ் 2 மாணவருடன் 9ம் வகுப்பு மாணவி மாயமானதாக புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

குமரி மாவட்டம் அருமனை அருகே ஒரு கிராமத்தில் வசிக்கும் பெண் ஒருவர் தற்போது இரண்டாவது கணவருடன் வசித்து வருகிறார். அவரது முதல் கணவருக்கு பிறந்த 14 வயது மகளும் தன் தாயுடனே தங்கியுள்ளார். இந்த சிறுமி அருகேயுள்ள பள்ளிக்கூடத்தில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது தேர்வு விடுமுறை என்பதால் வீட்டில் இருந்தார். மாணவி தினமும் தனது தாயின் செல்போனில் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பார்ப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.

மகள் ரீல்ஸ்தான் பார்க்கிறார் என தாயார் நினைத்தார். ஆனால் மாணவி, 17 வயது ஆண் நண்பர் ஒருவருடன் சாட்டிங் செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. பக்கத்து ஊரில் வசிக்கும் ஆண் நண்பர் பிளஸ் 2 படிக்கும் மாணவர் என கூறப்படுகிறது. இந்த விஷயம் அரசல் புரசலாக மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதுகுறித்து மாணவியை தாயார் கண்டித்ததாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த மாணவியை திடீரென காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த தாயார் தனது மகளை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து மாணவியின் தாயார் அருமனை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவியுடன் பேசிய மாணவனும் திடீரென மாயமாகியுள்ளதாக கூறப்படுகிறது. எனவே மாணவன்தான் மாணவியை அழைத்து சென்றிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். அவர்கள் இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory