» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடியில் 135 பவுன் தங்க நகை மோசடி: நிதி நிறுவன பெண் உரிமையாளர் கைது
புதன் 19, மார்ச் 2025 8:01:06 AM (IST)
தூத்துக்குடியில் அடகு வைத்த நகையை திருப்பி கொடுக்காமல் கொலை மிரட்டல் விடுத்ததாக தனியார் நிதி நிறுவன பெண் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி காந்திநகரைச் சேர்ந்தவர் ஜியோ. கப்பல் ஊழியரான இவருடைய மனைவி ஜெயராணி என்ற ஜெயா (34). இவர் வீடு வாங்குவதற்காக தனது நகைகளை வங்கியில் அடமானம் வைத்து இருந்தாா். இதற்கிடையே அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் அவருக்கு கூடுதலாக பணம் தேவைப்பட்டது.
இதை அறிந்த தனியார் நிதிநிறுவன உரிமையாளர் தூத்துக்குடியைச் சேர்ந்த மெசிங்டன் மனைவி ஜீவா ஹெர்மனா, சங்கரவேல் மகன் மகேஸ்வரன் உள்ளிட்டவர்கள் ஜெயராணியிடம் வங்கியில் அடகு வைத்த நகைகளை மீட்டு கூடுதல் தொகைக்கு மறுஅடமானம் வைத்து தருவதாக கூறினார்கள்.
ஜெயராணி, வங்கியில் இருந்த 135 பவுன் தங்கநகைகளை மீட்டு, தனியார் நிதி நிறுவனத்தில் சுமார் ரூ.53 லட்சத்து 42 ஆயிரத்துக்கு மறு அடமானம் வைத்ததாக கூறப்படுகிறது. சில மாதங்கள் கடந்த பின்னர் ஜெயராணி தனது நகைகளை திருப்புவதற்காக மொத்தம் ரூ.43 லட்சத்து 41 ஆயிரம் ெகாடுத்தார். ஆனால் மொத்த பணத்தையும் வட்டியுடன் செலுத்தினால் மட்டுமே நகையை மீட்க முடியும் என்று தெரிவித்தனர். இதனால் மீதி பணத்தையும் தயார் செய்த பிறகு நகையை ஜெயராணி கேட்டு உள்ளார்.
ஆனால் ஜீவாஹெர்மனா, மகேசுவரன் ஆகியோர் நகையை தரமறுத்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயராணி அடகு வைத்த தனது நகைகளை மீட்டு தரக்கோரி தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ஜீவா ஹெர்மனாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகேஸ்வரனை தேடி வருகின்றனா். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிளஸ் 2 பொதுத் தேர்வில் குமரி மாவட்டம் 5 வது இடம்பெற்று சாதனை : ஆட்சியர் வாழ்த்து
வெள்ளி 9, மே 2025 10:12:02 AM (IST)

பிளஸ் 2 மாணவருடன் பள்ளி மாணவி ஓட்டம்? குமரி அருகே பரபரப்பு
வியாழன் 8, மே 2025 5:24:43 PM (IST)

குமரி மாவட்டத்தில் பள்ளி வாகனங்களை ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
வியாழன் 8, மே 2025 5:15:12 PM (IST)

தக்கலை ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
புதன் 7, மே 2025 5:14:58 PM (IST)

இன்ஸ்டாகிராமில் பழகி சிறுமியை பாலியல் தொழில் ஈடுபடுத்த முயற்சி: 4பேர் கைது!
புதன் 7, மே 2025 5:12:36 PM (IST)

பயிற்சி மாணவர்கள் நோயாளிகளுக்கு மருந்துகள் விநியோகம் செய்யக்கூடாது: ஆட்சியர் அறிவுறுத்தல்
புதன் 7, மே 2025 12:32:08 PM (IST)

NAAN THAANMar 19, 2025 - 04:48:07 PM | Posted IP 104.2*****