» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தென் மாவட்ட இளைஞர்களுக்கு ஐஐடி மெட்ராஸ் பயிற்சி: டிஎம்பி பவுண்டேஷன் ஒப்பந்தம்!

செவ்வாய் 18, மார்ச் 2025 4:50:14 PM (IST)



தென் மாவட்ட இளைஞர்களுக்காக ஐஐடி மெட்ராஸ் உடன் டிஎம்பி பவுண்டேஷன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இன்று நிறைவேற்றி உள்ளது. 

தென் தமிழக குறிப்பாக தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட இளைஞர்கள் வேலை வாய்ப்பு இல்லாமலும், முறையான வழி காட்டுதல் இல்லாமலும் தங்கள் வாழ்க்கை போராட்டத்தில், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் முனைந்து கொண்டுள்ளனர் 

இவர்களின் வாழ்வின் முன்னேற்றம் கருதி டிஎம்பி பவுண்டேஷன், வங்கித்துறையிலும், பொருளாதார துறையிலும் மற்றும் காப்பீட்டுத் துறையிலும் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையிலும், வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையிலும் தங்களது நிறுவன சமூக பொறுப்பின் அடிப்படையில் பாட திட்டங்களை அறிமுகம் செய்ய உள்ளது. 

இதன் அடிப்படையில் முதற்கட்டமாக ஐஐடி மதராஸூடன் ஓர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இன்று நிறைவேற்றி உள்ளது. இதன்படி 120 மாணவர்கள் நான்கு மாத கால கட்டத்தில் பயிற்சியை முடிப்பார்கள். அதன்படி அடுத்த மூன்று ஆண்டுகளில் 1000 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க இலக்குடன் செயல் பட உள்ளது. பயிற்சியளித்து வாய்ப்புகளை அதிகர்க்க வைப்பதே இதன் நோக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிகழ்ச்சியில் டிஎம்பி பவுண்டேஷன் நிர்வாக அறங்காவலர் சலி எஸ் நாயர், ஐஐடி மதராஸ் அதிகாரி ராஜேஸ், டிஎம்பி பவுண்டேஷன் தலைமை நிர்வாக அதிகாரி முத்தையா ஆகியோர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

SRINIVASANMar 19, 2025 - 11:10:29 AM | Posted IP 172.7*****

தாழ்மையான வேண்டுகோள், உங்கள் விளைவை நான் பாராட்டுகிறேன்..தெற்கு இளைஞர்களுக்காக தொடர்ந்து நினைவில் கொள்ளுங்கள்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory