» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தூத்துக்குடி மாவட்டத்தில் 89 பேருக்கு பிடியாணை நிறைவேற்றம் :‍ காவல்துறை நடவடிக்கை!

திங்கள் 17, மார்ச் 2025 10:17:12 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை நிலுவையில் இருந்த 689 பேருக்கு பிடியாணை நிறைவேற்றப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் நிலைய வழக்குகளில் சம்பந்தப்பட்ட எதிரிகளை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர் ஜாமீனில் வெளிவந்த எதிரிகள் தொடர்ந்து நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்த காரணத்தினால் நீதிமன்றத்தால் பிடியாணை  பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் இருந்த வழக்குகளில் மாவட்ட காவல்துறையின் நடவடிக்கையால் இந்த ஆண்டு இதுவரை 689 எதிரிகளுக்கு பிடியாணை நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட எதிரிகள் தொடர்ந்து ஆஜராகமலும், தலைமறைவாகவும் இருந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல்துறையால் தெரிவித்து கொள்ளப்படுகிறது.


மக்கள் கருத்து

NAAN THAANMar 19, 2025 - 05:11:26 PM | Posted IP 172.7*****

ஒரு வெள்ளை சட்டை போட்ட மருத்துவர் பச்சை மை கையெழுத்துடன் கூடிய உடல் னால குறைவு சான்றை வேறு ஒரு கருப்பு அங்கி போட்டவர் மனுவாக நீதிமன்றத்தில் கொடுத்தால் விளக்கு பிடித்து விலக்கு அளிக்கலாம் அல்லவா

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory