» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மீனவருக்கு 20 ஆண்டு சிறை : நாகர்கோவில் நீதிமன்றம் தீர்ப்பு

சனி 15, பிப்ரவரி 2025 3:42:45 PM (IST)

14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மீனவருக்கு 20 ஆண்டு சிறை நாகர்கோவில் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

குமரி மாவட்டம், புதுக்கடை அருகே இணையம் புத்தன் துறை பகுதியை சேர்ந்தவர் சுதன் (32), மீனவர். இவர் கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இணையம் பகுதியை சேர்ந்த 14 வயது மாணவி ஒருவரை பெங்களூருக்கு அழைத்து சென்று லாட்ஜில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்தார். இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவி புதுக்கடை போலீசில் புகார் செய்தார். 

புகாரின் பேரில் போலீசார் சுதன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். சுதனை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை ஆனார். இது தொடர்பான வழக்கு நாகர்கோவில் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. 

வழக்கு விசாரித்த நீதிபதி சுந்தரையா இன்று தீர்ப்பு கூறினார். இதையடுத்து சுதன் நீதிமன்றத்தில் ஆஜரானார். சுதனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.6000 அபாரதம் விதித்து தீர்ப்பு கூறினார். ரூ.6 ஆயிரத்தை கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சுதனுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறைக்கு அழைத்து சென்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory