» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தூக்குப்போட்டு தற்கொலை: உருக்கமான கடிதம் சிக்கியது!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 5:58:36 PM (IST)
தக்கலை அருகே போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தக்கலை அருகே உள்ள முளகுமூடு மலைமுருங்கத்தட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன் அருள்ராஜ் (வயது56). நாகர்கோவில் போக்குவரத்து போலீசில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இவருக்கு வயோலா என்ற மனைவியும், 2 மகளும் உள்ளனர். இதில் மூத்த மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. இளைய மகள் கல்லூரியில் படித்து வருகிறார்.
ஸ்டீபன் அருள்ராஜூக்கு உடல்நலக்குறைவு காரணமாக இடது காலில் புண் ஏற்பட்டது. இதற்கு பல இடங்களில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. இதனால், பணிக்கு செல்ல முடியாமல் கடந்த 2 மாதமாக மருத்துவ விடுப்பில் வீட்டில் இருந்து வந்தார். உடல்நலக்குறைவுக்கு சிகிச்சை பெற்றும் சரியாகாததால் கடந்த சில நாட்களாக ஸ்டீபன் அருள்ராஜ் மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்தார்.
அவருக்கு குடும்பத்தினர் ஆறுதல் கூறி வந்துள்ளனர். மேலும், ஸ்டீபன் அருள்ராஜூக்கு மருத்துவ விடுப்பு முடிந்து இந்த மாதம் பணியில் சேர வேண்டும். ஆனால், உடல்நிலை சரியாகாததால் பணியில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று இரவு ஸ்டீபன் அருள்ராஜ் சாப்பிட்டு விட்டு தனது அறைக்கு தூங்கச் சென்றார். காலை அவரது அறைக்கு மனைவி வயோலா சென்று பார்த்தபோது, அங்கு கணவரை காணவில்லை. உடனே அவர் வீட்டின் பின்பக்கம் சென்று பார்த்துள்ளார்.
அப்போது அங்குள்ள மரத்தில் ஸ்டீபன் அருள்ராஜ் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்த மகள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்து பார்த்தனர். பின்னர், இதுபற்றி தக்கலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஸ்டீபன் அருள்ராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் ஸ்டீபன் அருள்ராஜின் உடலை மரத்தில் இருந்து இறக்கியபோது, அவரது சட்டை பையில் இருந்து அவர் கைப்பட எழுதிய கடிதத்தை கைப்பற்றி உள்ளனர். அதில் தனது உடல்நிலை உள்பட பல்வேறு தகவல்களை அவர் உருக்கமாக எழுதி இருந்தாக போலீசார் தெரிவித்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் 120 தேர்வு மையங்களில் குரூப் 4 தேர்வு : ஆட்சியர் அழகுமீனா ஆய்வு
சனி 12, ஜூலை 2025 5:23:30 PM (IST)

குமரி மாவட்டத்தில் வளர்ச்சித்திட்ட பணிகளை விரைந்து முடித்திட அமைச்சர் அறிவுறுத்தல்!
வெள்ளி 11, ஜூலை 2025 10:50:26 AM (IST)

திருவனந்தபுரம் - திருநெல்வேலி நேரடி பயணிகள் ரயில்கள் இயக்க கோரிக்கை
வியாழன் 10, ஜூலை 2025 5:21:07 PM (IST)

குமரி மாவட்டத்தில் 8 நாட்களில் 10 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு!!
புதன் 9, ஜூலை 2025 8:26:11 PM (IST)

விரிகோடு ரயில்வே கேட் வழியாக மேம்பாலம் அமைக்கப்படும்: விஜய் வசந்த் எம்.பி. உறுதி!!
புதன் 9, ஜூலை 2025 8:22:21 PM (IST)

பிளஸ்-2 மாணவி பலாத்காரம்: திருமணமான வாலிபர் மீது போக்சோ வழக்கு
புதன் 9, ஜூலை 2025 8:19:31 PM (IST)
