» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

விலைவாசி உயர்வு குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்: விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை

செவ்வாய் 11, பிப்ரவரி 2025 11:32:09 AM (IST)

நாட்டில் பெருகி வரும் விலைவாசி உயர்வு குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டுமென விஜய்வசந்த் எம்பி ஒத்திவைப்பு தீர்மானம் முன்மொழிந்துள்ளார்.

நாட்டில் பெருகி வரும் விலைவாசி உயர்வு மற்றும் அதை தடுக்க தவறும் மத்திய அரசின் மெத்தன போக்கையும் குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டுமென கோரி கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றினை முன்மொழிந்துள்ளார்.

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு குறிப்பாக காய்கறிகள், சமையல் எண்ணெய், பால் போன்ற பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு போகிறது. இது பொதுமக்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தி அவர்கள் மீதான சுமை அதிகரித்த வண்ணம் உள்ளது. 

ஆனால் மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டிலோ, நிதி அறிக்கையிலோ விலைவாசியை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் மத்திய அரசு முன்வைக்கவில்லை. பெட்ரோல் டீசல் விலை அதிகரித்துள்ளது அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு ஒரு முக்கிய காரணம். சமையல் எரிவாயு மற்றும் எரிவாயு விலைகளை கட்டுப்படுத்தி மக்கள் சுமையை குறைப்பதற்கு அரசு முன்வரவில்லை என்பது மக்கள் விரோத செயல்.

மக்களின் வருமானம் கடந்த ஆண்டுகளில் கணிசமாக குறைந்துள்ளது. அவர்கள் வருமானத்தை விட செலவு அதிகமாக இருப்பதற்கு இது முக்கிய காரணம்.விலைவாசி உயர்வுக்கு ஏற்ற வண்ணம் தொழிலாளர்களின் ஊதியத்தை மறுநிர்ணயம் செய்ய வேண்டியது அரசின் கடமை. அவர்களுக்கு குறித்த நேரத்தில் சரியான ஊதியம் வழங்க இந்த அரசு தவறியுள்ளது.மத்திய அரசின் தவறான GST வரி விதிப்பும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர காரணமாக உள்ளது.

மேலும் விலைவாசி உயர்வு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் தடையாக உள்ளது.மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு பெரும் சவாலாக அமைந்துள்ள இந்த விலை உயர்வு குறித்தும், நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும் விலைவாசி உயர்வு குறித்தும் பாராளுமன்றத்தில் மற்ற அலுவல்களை மாற்றி வைத்து விவாதிக்க வேண்டுமென ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றினை முன்மொழிந்துள்ளேன்." என்று தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory