» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ரூ.7.47 இலட்சம் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 10, பிப்ரவரி 2025 4:14:38 PM (IST)

குமரி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.7.47 இலட்சம் மதிப்பில் மாற்றுத்திறன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் ஆர்.அழகுமீனா வழங்கினார்
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (10.02.2025) நடைபெற்றது. இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், பொது மக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 315 கோரிக்கை மனுக்கள் இன்று பெறப்பட்டது. பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட அனைத்து கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து தீர்வு காணுமாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதனைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ரூ.1.94 இலட்சம் மதிப்பில் 12 மாற்றுத்தினாளிகளுக்கு திறன்பேசிகள், ரூ.3.43 இலட்சம் மதிப்பில் 3 மாற்றுத்தினாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலி மற்றும் ரூ.2.10 மதிப்பில் 2 மாற்றுத்தினாளிகளுக்கு NeoMotion சக்கர நாற்காலி என மொத்தம் 17 மாற்றுத்தினாளிகளுக்கு ரூ.7.47 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் செந்தில்வேல் முருகன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சேக் அப்துல் காதர், மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் தினேஷ் சந்திரன், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரியில் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம்: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:24:18 PM (IST)

குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பணியிடம் : விண்ணப்பங்கள் வரவேற்பு!
வெள்ளி 19, டிசம்பர் 2025 12:12:56 PM (IST)

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்ப்பு பணி: ஆட்சியர் ஆய்வு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:53:00 PM (IST)

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி திருக்கோயிலில் நாளை ஹனுமான் ஜெயந்தி விழா
வியாழன் 18, டிசம்பர் 2025 3:42:39 PM (IST)

சட்டவிரோதமாக செயல்பட்ட கல்குவாரியில் எஸ்பி ஆய்வு : மேற்பார்வையாளர் கைது!
வியாழன் 18, டிசம்பர் 2025 12:06:04 PM (IST)

நாகர்கோவிலில் நாளை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் - ஆட்சியர் தகவல்!
வியாழன் 18, டிசம்பர் 2025 10:42:55 AM (IST)


.gif)