» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
அயக்கோடு, அருவிக்கரை வளர்ச்சி திட்டப்பணிகள் : ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
வெள்ளி 24, ஜனவரி 2025 4:34:19 PM (IST)

சுருளக்கோடு, அயக்கோடு, அருவிக்கரை ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சுருளக்கோடு, அயக்கோடு, அருவிக்கரை ஆகிய ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை இன்று (24.01.2025) மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்: தமிழ்நாடு முதலமைச்சர் ஊரக உள்ளாட்சி பகுதிகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திடும் வகையில் முதலமைச்சரின் கிராம சாலை திட்டம், கலைஞர் கனவு இல்ல திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தீட்டி அதற்கான நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள்.
அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் ஊராட்சி ஒன்றியம், சுருளக்கோடு ஊராட்சிக்குட்பட்ட கூவக்காட்டுமலை குக்குகிராமத்தில் கலைஞரின் கனவு இல்லம் 2024-2025 திட்டத்தின் கீழ் 8 பயனாளிகளுக்கு தலா ரூ.3.50 இலட்சம் மதிப்பில் கட்டிவரும் வீட்டின் கட்டுமான பணிகளை இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் கட்டப்பட்டு வரும் வீடுகள் அஸ்திவாரம் போடப்பட்ட நிலையில் மேற்கொண்டு பணிகள் நடைபெறாத நிலையில் இருப்பதை பார்வையிட்டு, தேவையான சிமெண்ட், கம்பிகள் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் கிடைத்திடவும் தேவையான வங்கி கடனுதவிகள் பெற்றுக்கொடுக்கவும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதோடு, விரைந்து கட்டுமான பணிகளை முடித்திட பயனாளிகளிடம் அறிவுறுத்தினார்கள்.
அதனைத்தொடர்ந்து அயக்கோடு ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.4.54 கோடி மதிப்பில் மலவிளை அருகே பரளியாறு குறுக்கே கட்டப்பட்டு வரும் பாலப்பணிகளை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் இப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர ஒப்பந்ததாரர் மற்றும் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் அருவிக்கரை ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.5.60 கோடி மதிப்பில் மாத்தூர் தொட்டிபாலம் முதல் முதலாறு இணைப்புசாலை கட்டுமான பணிகள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டதோடு, கட்டுமான பணிகள் தரமானதாகவும், பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தெரிவித்தார்கள்.
நடைபெற்ற ஆய்வுகளில் ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர் ஷாஜகான், திருவட்டார் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சுப்பிரமணியம், வட்டார வளர்ச்சி அலுவலர் சசி, உதவி பொறியாளர் கீதா, துறை அலுவலர்கள், ஒப்பந்ததார்கள், பயனாளிகள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்டத்தில் வளர்ச்சித்திட்ட பணிகளை விரைந்து முடித்திட அமைச்சர் அறிவுறுத்தல்!
வெள்ளி 11, ஜூலை 2025 10:50:26 AM (IST)

திருவனந்தபுரம் - திருநெல்வேலி நேரடி பயணிகள் ரயில்கள் இயக்க கோரிக்கை
வியாழன் 10, ஜூலை 2025 5:21:07 PM (IST)

குமரி மாவட்டத்தில் 8 நாட்களில் 10 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு!!
புதன் 9, ஜூலை 2025 8:26:11 PM (IST)

விரிகோடு ரயில்வே கேட் வழியாக மேம்பாலம் அமைக்கப்படும்: விஜய் வசந்த் எம்.பி. உறுதி!!
புதன் 9, ஜூலை 2025 8:22:21 PM (IST)

பிளஸ்-2 மாணவி பலாத்காரம்: திருமணமான வாலிபர் மீது போக்சோ வழக்கு
புதன் 9, ஜூலை 2025 8:19:31 PM (IST)

சுற்றுலா திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா அழைப்பு!
புதன் 9, ஜூலை 2025 5:19:37 PM (IST)
