» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

போலியான படத்தை வைத்து பொய் தகவலை பரப்புவதாக சீமான் மீது காவல் நிலையத்தில் புகார்

செவ்வாய் 21, ஜனவரி 2025 4:37:02 PM (IST)

போலியான புகைப்படத்தை வைத்து உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்புவதாக சீமான் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது மீது தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தினர் வடசேரி காவல் நிலையத்தில் அளித்துள்ள புகார் மனுவில், "கடந்த 2008 ஆம் ஆண்டு தமிழ் ஈழ விடுதலைப் போரின் போது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை சந்தித்து ஈழப் போர் குறித்தும் தமிழக அரசியலில் நாம் தமிழர் கட்சி உருவாக்கம் குறித்தும் பேசியதாக தொடர்ச்சியாக பொதுக்கூட்டங்களிலும், பொதுவெளியிலும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்து வருகிறார்.               

ஆனால் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை சீமான் சந்திக்கவே இல்லை எனவும் பிரபாகரனுடன் சீமான் இருக்கும் புகைப்படத்தை நான்தான் எடிட்டிங் மூலமாக உருவாக்கினேன் எனவும் திரைப்பட இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் என்பவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் 

விடுதலைப்புலிகள் தலைவர் தமிழ் தேசிய அரசியலை முன்னெடுக்க சொன்னார் அவரை சந்தித்தபோது எனக்கு வாகனம் அனுப்பினார் ஆமைக்கறி சமைத்து போட்டார் தொடர்ந்து போர்க்களத்தில் நான் பிரபாகனுடன் இருந்தபோது எனக்கு துப்பாக்கி சுடும் பயிற்சியும் அளித்தார் எனக்கூறி உண்மைக்கு புறம்பாக நம்பிக்கை கொடுத்து பொதுமக்களை ஏமாற்றும் விதத்தில் இலங்கை தமிழ் மக்களையும் வெளிநாடு வாழ் தமிழர்களையும் ஏமாற்றி மோசடி செய்து அவர்களிடமிருந்து நாம் தமிழர் கட்சிக்கு திரள்நிதி என்ற பெயரில் கோடிக்கணக்கில் மோசடி பண வசூல் செய்து வருகிறார்.       

போலியான புகைப்படத்தை வைத்து உண்மைக்கு புறம்பான தகவல்களை பொதுவெளியில் கூறி தமிழக மக்களையும் தனது கட்சியினரையும் தனது மோசடி பேச்சால் ஏமாற்றி பொதுவெளியில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு இருக்கும்  நற்பெயருக்கு அவதூறு ஏற்படுத்தும் விதமாக பொய்யான செய்திகளை வெளியிட்டு வந்ததோடு விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுடன் இருப்பது போல் புகைப்படத்தை எடிட்டிங் மூலம் சித்தரித்து மோசடிகளும் பணப்பறிப்பிலும் ஈடுபட்டு வருவதால் பொதுமக்களும் நாங்களும் மிகுந்த மன உளைச்சல் அடைந்து வருகிறோம்.                 
உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பையும் தொடர் மோசடியிலும் ஈடுபட்டு வரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் என்ற சைமன் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டம் என கோரிக்கை விடுத்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory