» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைத் தீர்க்கும் நாள் கூட்டம்: ஆட்சியர் தகவல்
செவ்வாய் 21, ஜனவரி 2025 12:12:18 PM (IST)
குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகிற 24ஆம் தேதி மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தலைமையில் மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 24.01.2025 அன்று காலை 11.30 மணிக்கு மாவட்ட ஆட்சியரக நாஞ்சில் கூட்ட அரங்கம் நாகர்கோவிலில் வைத்து நடைபெற உள்ளது.
எனவே, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் தங்களின் கோரிக்கைகளுடன் 24.01.2025 அன்று 11.30 மணிக்கு நடைபெறும் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் அழகுமீனா கேட்டுக்கொண்டுள்ளார்.