» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
வணிகவியல், பொருளியல் பாடங்களில் தேர்ச்சி சதவீதத்தினை உயர்த்திட ஆட்சியர் அறிவுறுத்தல்
செவ்வாய் 21, ஜனவரி 2025 12:01:06 PM (IST)

பொதுத்தேர்வில் வணிகவியல், பொருளியல் உள்ளிட்ட பாடங்களில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தினை உயர்த்திட வேண்டும் என சிரியர்களுக்கான மீளாய்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா அறிவுறுத்தினார்.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தலைமையில் ஆசிரியர்களுக்கான மீளாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில்- கன்னியாகுமரி மாவட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தினை அதிகரிக்க, கடந்த ஆண்டு பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைந்த பாடங்களான கணக்குப்பதிவியல், வணிகவியல் மற்றும் பொருளியல் பாட முதுகலை ஆசிரியர்களுக்கு, அரையாண்டு தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு மீளாய்வு கூட்டம் நடத்தப்பட்டது. மீளாய்வின்போது மதிப்பெண் குறைவிற்கான காரணங்கள் ஆசிரியர்களிடம் கேட்டறியப்பட்டது.
தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க எடுக்கப்பட்ட முன்னெடுப்புகள், பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிறப்பு பயிற்சிகள் மற்றும் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு மாணவர்களின் தேர்ச்சி வீதத்தை அதிகரிக்க எடுக்கப்பட்ட சிறப்பு திட்டங்கள் உள்ளிட்டவைகள் குறித்து ஆசிரியர்களிடம் பள்ளி வாரியாக கேட்டறியப்பட்டது. மாவட்டத்திற்குட்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் ஏழை எளிய மாணவர்களுக்கு ஆசிரியர்கள் தான் சிறந்த வழிகாட்டியாக அமைந்திட வேண்டும் எனவும், மாணவர்கள் தோல்வியுறும் பட்சத்தில் அவர்களது எதிர்காலம் கேள்விக்குறியாகி விடுவதால், இதில் அதிக கவனம் செலுத்தி, ஆசிரியர்கள் மாணவர்கள் நலனில் அக்கறை கொண்டு செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
மேலும் பொதுத்தேர்வுக்கு குறுகிய கால அளவே இருப்பதால் மாணவர்களுக்கு தொடர் பயிற்சி அளித்து, மாணவர்களின் கற்றலில் ஏற்படும் குறைபாட்டினை களையும் வண்ணம் விடாமுயற்சியுடன் செயல்பட வேண்டும் எனவும், தொடர்ந்து வருகின்ற திருப்புதல் தேர்வுகளில், தற்போது குறைந்த அடைவு பெற்ற மாணவர்களை தொடர் சிறப்பு பயிற்சிகளின் மூலம் அடைவு பெற செய்ய வேண்டியது ஆசிரியர்களின் தலையாய கடமை எனவும் அறிவுறுத்தப்பட்டது.
எனவே ஆசிரியர்களாகிய நீங்கள் அனைவரும் பொறுப்புடன் மாணவர்களுக்கு கல்வி கற்றுக்கொடுத்து, முழு தேர்ச்சி சதவீதத்தை அடைவதோடு, கன்னியாகுமரி மாவட்டத்தின் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்திட முழு பங்காற்றிட வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தெரிவித்தார்கள். நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பள்ளிகல்வி) சாரதா, மாவட்ட கல்வி அலுவலர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பணி நியமன ஆணை..!
சனி 15, பிப்ரவரி 2025 5:44:14 PM (IST)

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மீனவருக்கு 20 ஆண்டு சிறை : நாகர்கோவில் நீதிமன்றம் தீர்ப்பு
சனி 15, பிப்ரவரி 2025 3:42:45 PM (IST)

கனிமவளங்களை கடத்த அரசே அனுமதி அளிப்பதா? அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு!
சனி 15, பிப்ரவரி 2025 11:57:45 AM (IST)

கோழிக்கோடு சி.எஸ்.ஐ. தமிழ் ஆலய பிரதிஷ்டை விழா: குமரிப் பேராயர் செல்லையா பங்கேற்பு!
சனி 15, பிப்ரவரி 2025 8:32:14 AM (IST)

சொத்துக்குவிப்பு வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் விடுதலை!
வெள்ளி 14, பிப்ரவரி 2025 5:48:59 PM (IST)

நாகர்கோவிலில் பிப்.19ம் தேதி 6வது புத்தகத் திருவிழா தொடக்கம் : ஆட்சியர் அழகுமீனா தகவல்
வியாழன் 13, பிப்ரவரி 2025 3:53:01 PM (IST)
