» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
பள்ளிப் பேருந்து வயலுக்குள் பாய்ந்து விபத்து: மாணவ, மாணவிகள் உயிர் தப்பினர்
வியாழன் 9, ஜனவரி 2025 7:55:56 AM (IST)
குரும்பூர் அருகே பள்ளிப் பேருந்து வயலுக்குள் பாய்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில் பயணித்த 40 மாணவ, மாணவிகள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர்.
தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகே உள்ள பணிக்கநாடார்குடியிருப்பு பகுதியில் தனியார் பள்ளி செயல்படுகிறது. நேற்று மாலையில் பள்ளி முடிந்தவுடன், 40 மாணவ, மாணவிகளை ஏற்றிக் கொண்டு பள்ளிப் பேருந்து ஏரலை நோக்கி சென்று கொண்டிருந்தது. குரும்பூர் அடுத்துள்ள பாலத்தில் சென்றபோது, எதிரே வந்த தனியார் கல்லூரி பஸ் மீது மோதாமல் இருப்பதற்காக, டிரைவர் பள்ளிப் பேருந்தை பக்கவாட்டில் திருப்பி உள்ளார்.
இதில் நிலைதடுமாறிய அந்த பஸ் அருகிலுள்ள வயலுக்குள் பாய்ந்து விபத்துக்கு உள்ளானது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவ, மாணவிகள் கூச்சலிட்டனர். உடனடியாக அந்த வழியாக சென்றவர்களும், அக்கம் பக்கத்தினரும் ஓடிசென்று பஸ்சில் இருந்த மாணவ, மாணவிகளை பாதுகாப்பாக மீட்டனர்.
இதில், பஸ்சில் இருந்த 40 மாணவ, மாணவிகளும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். தகவல் அறிந்த மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் குவிந்தனர். பின்னர் அவர்கள், குழந்தைகளை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவில் சந்திப்பில் ரயில் சேவை மாற்றம் : குமரியில் இருந்து ரயில்கள் இயக்கம்!
புதன் 7, ஜனவரி 2026 4:37:07 PM (IST)

சான்றிதழ் வாங்கி வந்த இளைஞர்கள் பஸ் மோதி உயிரிழப்பு - குமரியில் சோகம்!
புதன் 7, ஜனவரி 2026 11:12:54 AM (IST)

தக்கலையில் 8ஆம் தேதி நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்: ஆட்சியர் ஆய்வு
செவ்வாய் 6, ஜனவரி 2026 5:30:33 PM (IST)

கோதையாற்றில் மீண்டும் தென்பட்ட முதலை: திற்பரப்பு அருகே பரபரப்பு !
செவ்வாய் 6, ஜனவரி 2026 4:41:22 PM (IST)

சிறுமி கடத்தல்: தலைமறைவான அண்ணன், தம்பி தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு!
செவ்வாய் 6, ஜனவரி 2026 12:13:24 PM (IST)

தமிழ்நாட்டில் ரயில்வே முனைய திறனை அதிகரிக்க பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை!
திங்கள் 5, ஜனவரி 2026 4:58:43 PM (IST)


கேள்விJan 9, 2025 - 08:41:13 AM | Posted IP 162.1*****