» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
அத்தியாவசிய உணவு, விவசாய பொருட்களுக்கு ஜி.எஸ்.டி விலக்கு: விஜய்வசந்த் எம்.பி கோரிக்கை
திங்கள் 9, டிசம்பர் 2024 12:29:19 PM (IST)
அத்தியாவசிய உணவு, விவசாய பொருட்களுக்கு ஜி.எஸ்.டி விலக்கு அளிக்க வேண்டும் என விஜய்வசந்த் எம்.பி கோரிக்கை கோரிக்கை விடுத்துள்ளார்.

பாமர மக்கள் அன்றாடம் உபயோகிக்கும் ஆட்டா, மைதா, ரவை, கடலை மாவு போன்ற உணவுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி விலக்கு அளித்து ஏழைகளுக்கு அரசு உதவ வேண்டும். அதுபோன்று விவசாயத்திற்கு பயன்படும் இயந்திரங்களுக்கும் ஜிஎஸ்டி விலக்கு அளிக்க வேண்டும்.
இது நலிந்து வரும் விவசாயிகளை காப்பாற்ற பெரிதும் உதவும். அத்தியாவசிய உணவு பொருட்கள் மீதான ஜிஎஸ்டி ஏழை மக்களையும், விவசாய பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி விவசாயிகளையும் மிகவும் பாதிக்கின்றன. மேலும் மத்திய அரசு விவசாயிகளுக்கும் விவசாயத்திற்கும் உதவும் வண்ணமாக கூடுதல் நிதி வழங்க வேண்டும். கிசான் சம்மான் நிதி திட்டம், நீர் பாசன திட்டங்கள் மற்றும் விவசாய ஆராய்ச்சிக்கு அதிகமான நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என கோரிக்கை கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்திய விண்வெளி மையம் 2035-ம் ஆண்டு நிறுவப்படும் : இஸ்ரோ தலைவர் நாராயணன் பேட்டி
திங்கள் 20, அக்டோபர் 2025 9:46:32 AM (IST)

தீபாவளி விற்பனை களை கட்டியது: ரயில், பஸ் நிலையங்களில் கூட்டம் அலைமோதல்!
ஞாயிறு 19, அக்டோபர் 2025 10:41:28 AM (IST)

கொட்டாவி விட்டதால் திறந்த வாயை மூட முடியாமல் தவித்த வாலிபர்: ஓடும் ரயிலில் பரபரப்பு!
ஞாயிறு 19, அக்டோபர் 2025 10:29:36 AM (IST)

தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாட அனைத்து அவசர உதவிகளுக்கு ஒரே எண்!!
வெள்ளி 17, அக்டோபர் 2025 4:47:49 PM (IST)

நெல்லை, தூத்துக்குடி, குமரி உட்பட உள்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!
வெள்ளி 17, அக்டோபர் 2025 4:32:24 PM (IST)

குமரி மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழை: திற்பரப்பு அருவியில் குளிக்க தடை!
வெள்ளி 17, அக்டோபர் 2025 10:25:13 AM (IST)
