» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

முத்தையாபுரம் பாலத்தின் சுவரில் வண்ணம் தீட்டும் பணி: மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு

வியாழன் 28, நவம்பர் 2024 5:42:16 PM (IST)



தூத்துக்குடி முத்தையாபுரம் ரவுண்டானவில் பாலத்தின் சுவரில் வண்ணம் தீட்டும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார். 

பின்னர் மேயர் கூறுகையில், தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளை அழகுபடுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். அதன் ஒரு பகுதியாக முத்தையாபுரம் ரவுண்டானாவில் தூத்துக்குடி மாநகராட்சியும் ஸ்பிக் நிறுவனமும் இணைந்து பாலத்தின் சுவற்றில் வண்ணம் தீட்டும் பணிகளும் பூங்கா அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றது. அந்தப் பணிகளையும் எம்டிஏ காலனி பகுதியில் நடைபெற்று வரும் புதிய பூங்கா பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தோம் என்றார். 

ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையர் மதுபாலன், வட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், வட்ட செயலாளர் பிரசாந்த், மாமன்ற உறுப்பினர் முத்துவேல், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் சென்றனர்.


மக்கள் கருத்து

உண்மை விளம்பிNov 28, 2024 - 11:13:08 PM | Posted IP 172.7*****

நல்ல பணி. வாழ்த்துக்கள். இது போன்று பிற இடங்களிலுக்கும் செய்யலாம். புது பஸ்டாண்டு to 3 வது ரயில்வே கேட் வரை உள்ள மேம்பாலத்தின் கீழ் அனைத்து கட்சி, வியாபார விளம்பரங்கள், சினிமா வால் போஸ்டர்கள் எழுதபட்டிருக்கின்றன/ஒட்டப்பட்டிருக்கின்றன. அது போன்று மதுரை ரோடு, FCI அருகில் உள்ள மேம்பாலங்களிலும் விளம்பரங்கள் உள்ளன. 2 ம் கேட் (SAV பள்ளி எதிரில்) உள்ள ரயில்வே சுவற்றில் (புதிதாக கட்டப்பட்டது) கட்சி விளம்பரங்கள் எழுதப்பட்டுள்ளன. மாநகராட்சி நிர்வாகம் மாநகராட்சி நிர்வாகம் இதை கவனிக்க வேண்டும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory