» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
வீடுகளில் நூலகம் அமைத்தவர்களுக்கு விருது: விண்ணப்பிக்க ஆட்சியர் அழகுமீனா அழைப்பு
செவ்வாய் 26, நவம்பர் 2024 3:10:31 PM (IST)
கன்னியாகுமரி மாவட்டத்தில் வீடுகளில் நூலகங்களை அமைத்து, சிறப்பாக பயன்படுத்தி வரும் வாசகர்களுக்கு விருது வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: பள்ளிக்கல்வித் துறை மானிய கோரிக்கையின்போது, ஒவ்வொரு மாவட்டத்திலும் வீடுதோறும் நூலகங்களை சிறப்பாக பயன்படுத்தி வரும் தீவிர வாசகர்களை கண்டறிந்து, சொந்த நூலகங்களுக்கு விருது வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அறிவித்திருந்தார். அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறந்த தனிநபர் இல்லங்களில் பராமரிக்கப்படும் நூலகங்களில் மாவட்ட அளவில் சிறப்பாக பராமரிக்கப்படும் ஒரு நூலகம் தேர்ந்தெடுத்து சொந்த நூலகங்களுக்கு ரூ.3,000/- மதிப்பில் விருது, கேடயம் மற்றும் சான்றிதழ் ஆகியவை வழங்கப்பட உள்ளது.
புத்தக ஆர்வலர்கள் தங்களது நூலகத்தில் உள்ள நூல்களின் எண்ணிக்கை, எந்தெந்த வகையான நூல்கள் மற்றும் அரிய நூல்கள் ஏதாவது இருப்பின் அதன் விவரம், எந்த ஆண்டு முதல் பராமரிக்கப்பட்டு வருகிறது மற்றும் பெயர், முகவரி, செல்போன் எண் ஆகிய விவரங்களுடன் "மாவட்ட நூலக அலுவலர், 61,எம் எஸ்,ரோடு,கவிமணி நிலையம், வடசேரி, நாகர்கோவில்-629 001” என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ டிசம்பர் 30 –ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் அல்லது [email protected] (cell no: 9965490870, Land line No: 04652 276945)என்ற மின்னஞ்சல் முகவரியிலோ, மாவட்ட நூலக அலுவலர் அலுவலகம், மாவட்ட மைய நூலகத்தில் நேரில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.