» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நாகர்கோவில் - திருவனந்தபுரம் சாலை சீரமைப்பு பணியை விரைவில் தொடங்க வலியுறுத்தல்

சனி 16, நவம்பர் 2024 12:15:41 PM (IST)

நாகர்கோவில் - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை சீரமைப்பு பணியை விரைவில் தொடங்க வேண்டும் என மார்த்தாண்டம் பகுதி வியாபாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

குமரி மாவட்டம், மார்த்தாண்டம் வழியாக செல்லும் நாகர்கோவில் -திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையானது, நீண்டகாலமாக பழுதடைந்து போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் உள்ளது. குறிப்பாக குழித்துறை, மார்த்தாண்டம், இரவிபுதூர்கடை, அழகியமண்டபம், வில்லுகுறிஉள்ளிட்ட பகுதிகளில் சாலை குண்டு, குழியுமாகக் காட்சியளிக்கிறது.

இச்சாலையை சீரமைக்க ரூ.19 கோடி நிதி ஒதுக்கப்பட்டு டெண்டர் விடப்பட்டுள்ளது. இருப்பினும் பணியைத் தொடங்காமல் தாமதப்படுத்தி வருகின்றனர். ஆகவே, உடனடியாக இப் பணியைத் தொடங்க வேண்டும் என மார்த்தாண்டம் பகுதி வியாபாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory