» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ஒசூர் சம்பவத்தைக் கண்டித்து வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்!

வியாழன் 21, நவம்பர் 2024 12:14:36 PM (IST)



ஒசூரில் வழக்கறிஞர் கண்ணன் மீதான கொலைவெறி தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து நாகர்கோவிலில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நீதிமன்ற வளாகத்திற்குள்  கண்ணன் என்ற வழக்கறிஞரை கொடூரமாக வெட்டிக்கொலை செய்ய முயற்சி செய்த சம்பவத்தைக் கண்டித்தும், சம்பந்தப்பட்ட குற்றவாளியை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டும், வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டத்தை உடனடியாக மத்திய மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி நாகர்கோவில் நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து வழக்கறிஞர்கள் சங்கத்தலைவர் ஜெயகுமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  

இதில், முன்னாள் தலைவர்கள் மரிய ஸ்டிபன், பால ஜனாதிபதி மற்றும் வழக்கறிஞர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.  இதுபோல் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory