» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கன்னியாகுமரியில் கண்ணாடி பாலம் பணி டிசம்பர் மாதத்திற்குள் நிறைவடையும்: அமைச்சர் எ.வ.வேலு

வியாழன் 21, நவம்பர் 2024 4:39:49 PM (IST)



கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை முதல் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் வரை நடந்து செல்வதற்கு ரூ.37 கோடி மதிப்பில் கண்ணாடி தரைத்தள பாலம் அமைக்கும் பணி டிசம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். 

பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அரசு செயலாளர் செல்வராஜ் பொதுப்பணித்துறை அரசு கூடுதல் செயலாளர் மன்கத் ராம் சர்மா, மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆகியோர் முன்னிலையில் இன்று கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை முதல் விவேகானந்தர் பாறை வரை சுற்றுலா பயணிகள் நடந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்டு வரும் கண்ணாடி இழை கூண்டு பாலத்தினை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்: முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களால் 2000 ஆண்டு நிறுவப்பட்டு தற்போது வெள்ளி விழா காண இருக்கும் அய்யன் திருவள்ளுவர் சிலையும்இ விவேகானந்தர் பாறையையும் இணைக்கும் கடல்சார் நடைபாதை பாலப்பணிகள் ரூ.37 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. இப்பாலத்தின் நீளம் 77 மீட்டர் மற்றும் அகலம் 10 மீட்டர் கொண்ட Bowstring Arch Bridge (பவ்ஸ்ட்ரிங் ஆர்ச் பாலம்) ஆகும். இது நவீன தொழில் நுட்பத்தில் கடல் அரிப்புஇ கடல் காற்றின் வேகம் போன்ற காரணிகளைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. 

தற்போது விவேகானந்தர் பாறையினை கண்டுகளிக்கும் சுற்றுலா பயணிகள் மீண்டும் படகு மூலம் அய்யன் திருவள்ளுவர் சிலையினை காண செல்வதால் அதிக நேரம் விரயமாகின்றது. இந்நடைபாலம் அமைக்கப்படுவதால் சுற்றுலா பயணிகள் எளிதாக அய்யன் திருவள்ளுவர் சிலைக்கு செல்லலாம். இப்பாலத்தில் 2.5 மீட்டர் அகலமுடைய கண்ணாடி அடித்தளம் கொண்ட நடைபாதை அமைக்கப்படவுள்ளது. இதனால் கடலின் அழகினை சுற்றுலா பயணிகள் நடந்தவாறே கண்டு ரசித்து மகிழலாம். மேலும் மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மற்றும் மாவட்டத்தின் வருவாய் வளர்ச்சியும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

அனைத்து பணிகளையும் விரைந்து முடித்து தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் ஜனவரி 1 -2025 அன்று பாலம் திறக்கப்பட்டு, சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்பதை இத்தருணத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்கள்.

ஆய்வுகளில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜே.ஜி.பிரின்ஸ் (குளச்சல்). ராஜேஷ்குமார் (கிள்ளியூர்), முன்னாள் அமைச்சர் என்.சுரேஷ் ராஜன், கண்காணிப்பு செயற்பொறியாளர் (திருநெல்வேலி) சராதா, நெடுஞ்சாலைத்துறை கோட்ட செயற்பொறியாளர் சத்தியமூர்த்தி (கன்னியாகுமரி), சண்முகநாதன் (திருநெல்வேலி), நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர்கள் ஜெரால்டு ஆண்டனி (நாகர்கோவில்), விஜயா (தக்கலை), வெனிஸ் (தோவாளை), பிரவீன் குமார் (குழித்துறை), உதவி செயற்பொறியாளர்கள் முருகேசன் (கட்டடம் மற்றும் பராமரிப்பு), ராஜலெட்சுமி (மின்னியல்), மாவட்ட சுற்றுலா அலுவலர் காமராஜ்இ கன்னியாகுமரி பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர்கள் அரவிந்த் (நாகர்கோவில்), ரெஜ்வின் (தக்கலை), பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக மேலாளர் சந்திரசேகரன், நாகர்கோவில் மாநகராட்சி மண்டல தலைவர் ஜவஹர், அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் அருண்காந்த், வட்டார மருத்துவக்குழு உறுப்பினர் பாபு, துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory