» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
அதிக வட்டி தருவதாக ரூ.70 லட்சம் மோசடி : நிதி நிறுவன ஊழியர் கைது
புதன் 6, நவம்பர் 2024 9:28:46 PM (IST)
தக்கலை அருகே அதிக வட்டி தருவதாக 14 பேரிடம் ரூ.70 லட்சம் மோசடி செய்த நிதி நிறுவன ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
நாகர்கோவில் அருகே உள்ள அனந்தம்பாலம் பகுதியை சேர்ந்தவர் சுனில் ஞானம் (35), வியாபாரி. இவரது அக்காள் அமுதா ராணி தக்கலை அருகே உள்ள வெள்ளிக்கோட்டில் வசித்து வருகிறார். அக்காள் வீட்டுக்கு சுனில்ஞானம் வரும் போது அதே பகுதியை சேர்ந்த சுஜின் (33) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
சுஜின் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பணம் வசூலிக்கும் ஊழியராக வேலை செய்து வந்தார். இவர் வெள்ளிக்கோடு பகுதியில் உள்ள பலரிடமும் அதிக வட்டி தருவதாக கூறி பணம் வாங்கியுள்ளார். இதை அறிந்த சுனில் ஞானமும் பல கட்டமாக ரூ.23 லட்சம் பணம் கொடுத்தார். ஆரம்பத்தில் மாதம்தோறும் சுஜின் வட்டி பணம் கொடுத்ததாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் சுஜினால் வட்டி பணம் கொடுக்க முடியவில்லை. இதனால் சுனில் ஞானம், அவரிடம் வட்டி தராவிட்டாலும் பரவாயில்லை, பணத்தை திருப்பி தருமாறு கேட்டார். ஆனால், சுஜின் பணத்ைத கொடுக்காமல் காலம் கடத்தி வந்தார்.
இதுகுறித்து சுனில் ஞானம் தக்கலை போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின் அடிப்படையில் சுஜினை போலீசார் பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். சுஜினை போலீசார் பிடித்து சென்ற விவரம் அறிந்ததும் அவரிடம் கடன் கொடுத்த பலர் தக்கலை போலீஸ் நிலையத்தில் திரண்டனர். அவர்கள் போலீசாரிடம், சுஜின் தங்களிடமும் பணத்தை வாங்கி விட்டு தராமல் ஏமாற்றியதாக கூறினர்.
இதை கேட்ட போலீசார் பணம் கொடுத்ததற்கான ஆதாரத்துடன் புகார் அளிக்குமாறு கூறினர். தொடர்ந்து வெள்ளிக்கோடு பகுதியை சேர்ந்த 13 பேர் தனித்தனியாக சுஜின் மீது புகார் அளித்தனர். இந்த புகார்கள் குறித்து இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி விசாரணை மேற்கொண்டதில் மொத்தம் 14 பேரிடமும் இருந்து ரூ.70 லட்சம் வாங்கி மோசடி செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சுஜின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து பத்மநாபபுரம் கோர்டில் ஆஜர்படுத்தி நாகர்கோவில் சிறையில் அடைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குடிநீரின் குளோரினேஷன் அளவு : ஆட்சியர் ஆய்வு!
வியாழன் 23, அக்டோபர் 2025 5:50:06 PM (IST)

குமரி மாவட்ட முதல்வர் மருந்தக சேமிப்பு குடோனில் ஆட்சியர் அழகுமீனா ஆய்வு
வியாழன் 23, அக்டோபர் 2025 11:06:33 AM (IST)

நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம் : காவல் துறை அழைப்பு!
புதன் 22, அக்டோபர் 2025 3:36:41 PM (IST)

தமிழகத்தின் 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்: நெல்லை, தூத்துக்குடி, குமரிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!
செவ்வாய் 21, அக்டோபர் 2025 4:56:25 PM (IST)

இந்திய விண்வெளி மையம் 2035-ம் ஆண்டு நிறுவப்படும் : இஸ்ரோ தலைவர் நாராயணன் பேட்டி
திங்கள் 20, அக்டோபர் 2025 9:46:32 AM (IST)

தீபாவளி விற்பனை களை கட்டியது: ரயில், பஸ் நிலையங்களில் கூட்டம் அலைமோதல்!
ஞாயிறு 19, அக்டோபர் 2025 10:41:28 AM (IST)


.gif)