» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
சாலைகளை ஆக்கிரமித்து கடை வைக்க கூடாது : மேயர் அறிவுறுத்தல்!
புதன் 4, செப்டம்பர் 2024 3:11:44 PM (IST)
தூத்துக்குடி மாநகராட்சியில் சாலைகளை ஆக்கிரமித்து கடைகளை அமைப்பதை தவிர்க்க வேண்டும் என்று மேயர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. முகாமை மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். கூட்டத்தில் மேயர் பேசுகையில், தூத்துக்குடி மாநகராட்சியில் வாரம் தோறும் மண்டலம் வாரியாக மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. தூத்துக்குடி வடக்கு மண்டலத்தில் உள்ள 15 வார்டுகளிலும் மாநகராட்சி பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
புதிதாக கட்டிடம் கட்டுபவர்கள், கட்டிட கழிவுகளை வீடுகளின் முன்னாள் கொட்டக் கூடாது. இதனால் சாலை அமைக்கும்போது சிரமம் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க மாநகராட்சியின் தாழ்வான பகுதிகளில் கட்டிட கழிவுகளை கொட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாலித்தீன் பைகளை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்த்து, மஞ்சள் பைகளை பயன்படுத்த வேண்டும். நகரில் உள்ள சாலைகளை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதால் சாலைகளை ஆக்கிரமித்து கடைகள் வைப்பதை தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்தார்.
கூட்டத்தில், 100க்கு மேற்ப்பட்ட பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை வழங்கினார்கள். மேலும், மாநகராட்சி 5வது வார்டுக்கு உட்பட்ட கிருஷ்ணராயபுரம் கிழக்கு 2, 3வது தெரு பகுதிகளில் சாலை மற்றும் வடிகால் வசதி அமைத்து தர வேண்டும் என்பது அப்பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது. அப்பகுதியை நேரில் ஆய்வு செய்து சாலை மற்றும் வடிகால் வசதி பனிகளை அமைத்து தந்த மேயர் ஜெகன் பெரியசாமிக்கு பொதுமக்கள் சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தனர்.
கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா, துணை ஆணையர் ராஜாராம், துணை பொறியாளர் சரவணன், உதவி பொறியாளர் பிரின்ஸ், மண்டல ஆணையர் ராஜசேகரன், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, மேயரின் உதவியாளர் ஜேஸ்பர், ரமேஷ் மாமன்ற உறுப்பினர் கீதா முருகேசன், பகுதி செயலாளரும் மண்டல தலைவருமான தொ.நிர்மல்ராஜ், மாமன்ற உறுப்பினர்கள் ரெங்கசாமி, கர்ப்பககனி, மரிய சுதா, சுப்புலட்சுமி, பவானி, நாகேஸ்வரி, அந்தோணி மார்ஷலின் மற்றும், மாநகராட்சி அதிகாரிகள் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
அடேங்கப்பாSep 6, 2024 - 11:25:15 AM | Posted IP 162.1*****
மில்லர்புரம் பஸ்ஸ்டாப் அருகே முஸ்லீம் ஒருவர் குறுகிய சாலையில் மூன்று கடை நடத்துகிறார். டீக் கடை, சர்பத் கடை, ஹெல்மட் வியாபாரம் இந்த ஆக்கிரமிப்பு உங்க லிஸ்ட்டிலே வராதுதானே!
மாமன்னன்Sep 5, 2024 - 05:25:23 PM | Posted IP 162.1*****
இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு
அட நான் தான்Sep 4, 2024 - 06:55:52 PM | Posted IP 172.7*****
காலை எழும் பாகம் இருந்தால் peek hour என்று சொல்லும் காலை 7 முதல் 10 வரை , மாநகராட்சி அலுவலகம் மிக அருகில் இருக்கும் மார்கெட் ரோடு பக்கம் போய் வாருங்கள்... 2 நாள் மட்டும் பார்க்கிங் கட்டண வசூலுகாக சரி செய்யப்பட்டது. பின்ன. சாலை போக்குவரத்து சரி செய்ய முடிந்ததும் வெண் சட்டை காவலர் அவர்கள் bike meethu அமர்ந்து fb reels பார்த்துகொண்டு இருக்கும் அழகு தான் என்ன...
கேள்விSep 4, 2024 - 06:18:40 PM | Posted IP 162.1*****
தமிழ் செல்வன் அவர்களே , அந்த கடை பெயர் வெளியிடுங்கள்
தமிழ்ச்செல்வன்Sep 4, 2024 - 04:36:20 PM | Posted IP 162.1*****
தூத்துக்குடி விவிடி மெயின் ரோட்டில் அண்ணாநகர் 6வது தெரு முனையில் ஒரு ஆள் தன் கடையை பத்தடி முன்னால் இழுத்து கட்டி ஷெட் போட்டு வைத்திருக்கிறார்.
மேயர் அவர்களே போய் அகற்றுங்கள் பார்ப்போம்....
பி.கண்ணாSep 6, 2024 - 01:03:58 PM | Posted IP 162.1*****