» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கடைகளில் இருந்து பாலித்தீன் பைகள் பறிமுதல் செய்யப்படும் - மேயர் அறிவிப்பு

புதன் 10, ஜூலை 2024 11:59:58 AM (IST)



தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் கடைகளில் இருந்து பாலித்தீன் பைகள் பறிமுதல் செய்யப்படும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி அறிவித்துள்ளார். 

தூத்துக்குடி மாநகர பகுதிகளில் பொதுமக்களின் கோரிக்கைகளை விரைந்து முடிக்கும் வகையில் ஒவ்வொரு வாரமும் புதன் கிழமை தோறும்  மண்டலம் வாரியாக கோரிக்கைகளை கேட்டு அறிந்து உடனடியாக நிவர்த்தி செய்யும் வகையில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்து வருகிறது  இன்று மேற்கு மண்டல அலுவலகத்தில் வைத்து மேற்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்கள் 15 முதல் 19,  30 முதல் 37, 42, 44 மற்றும் தெற்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்கள் 50 , 51) ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களிடம் குறைகள் தீர்க்கும் முகாம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில், மாநகராட்சி ஆணையர் மதுபாலன் முன்னிலையில் நடந்தது. 

முகாமை தொடங்கி வைத்து மேயர் பேசுகையில், "தூத்துக்குடியில் ஆறு கிலோ மீட்டர் தூரம் பக்கிள் கால்வாய் உள்ளது. இதில் வீடுகளில் இருந்து கொட்டப்படும் பாலித்தீன் பைகளால் தண்ணீர் செல்வதில் தடங்கல் ஏற்படுகிறது. தற்போது பிளாஸ்டிக் பொருட்கள் அதிகமாக பயன்பாட்டிற்கு வந்து உள்ளதாக தெரிகிறது. இதற்கு முன்பு பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்தும் கடைகளில் பறிமுதல் செய்வதோடு அபராதமும் விதிக்கப்பட்டு வந்தது. 

மேலும் ஒரு லட்சம் மஞ்சப்பைகள் விநியோகம் செய்யப்பட்டது. தற்போது பிளாஸ்டிக் பொருட்கள் அதிகமாக பயன்பாட்டிற்கு வந்திருப்பதால் இவைகள் அனைத்தும் இன்னும் ஓரிரு நாட்களில் பறிமுதல் செய்யப்படும். இதனால் கடைக்காரர்களே பிளாஸ்டிக் பொருட்களை அப்புறப்படுத்தி விடுங்கள். இல்லை என்றால் மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்து எச்சரிக்கை செய்வார்கள். அபராதம் விதிக்கப்படாது.

தூத்துக்குடி பி அன்டு டி காலனியில் மழைநீர் தேங்காத அளவுக்கு வடிகால் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது முத்தம்மாள் காலனியில் இந்த பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. தூத்துக்குடி நகர் முழுவதும் 2000 கிலோ மீட்டருக்கு ரோடுகள் புதிதாக போடப்பட்டுள்ளது. மேலும் சிறிய சிறிய சந்து பகுதிகளில் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு முன்பு மரங்களை வளருங்கள் என்று மேயர் ஜெகன் பெரியசாமி பேசினார்.

இந்த முகாமில் சொத்து வரி நிர்ணயம், சொத்துரி பெயர் மாற்றம், திருத்தங்கள், புதிய குடிநீர் இணைப்பு,தண்ணீர் கட்டண பெயர் மாற்றம், தண்ணீர் உபயோக கட்டண விகிதங்கள் மாற்றம், கட்டிட அனுமதி, ஆக்கிரமிப்புகள் அகற்றுதல், பொதுச் சுகாதாரம், உரிமை ஆணை கட்டணங்கள், தொழில்வரி, பாதாள சாக்கடை உள்ளிட்ட மாநகராட்சி சேவை குறித்து பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர். 

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி செயற்பொறியாளர் ரங்கநாதன், உதவி செயற்பொறியாளர் மகேந்திரன், துணை மாநகர செயற்பொறியாளர் சரவணன், மேற்கு மண்டல உதவி ஆணையர் சுரேஷ்குமார், மாநகர சுகாதார அலுவலர் பொறுப்பு தினேஷ், இளநிலை பொறியாளர்கள் சேகர், பிரபாகரன், சுகாதார ஆய்வாளர் ஸ்டான்லி பாக்கியநாதன், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரை மணி, மாநகராட்சி கவுன்சிலர்கள் இசக்கி ராஜா, பொன்னப்பன், சந்திரபோஸ், பாப்பாத்தி அம்மாள், சரவணகுமார், ராமர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்


மக்கள் கருத்து

மாமன்னன்Jul 12, 2024 - 02:03:13 PM | Posted IP 172.7*****

தூத்துக்குடி ரோச் பார்க் பாலத்தில் கொட்டப்படும் பாலீதின் குப்பைகளை தடுக்க ஏதாவது முயற்சி செய்யுங்கள். Tutyonline விழிப்புணர்வு பதிவு போடுங்க

முட்டாள்Jul 10, 2024 - 01:21:35 PM | Posted IP 162.1*****

பாலித்தீன் பைகளை பறிமுதல் செய்ய வாய்ப்பில்லை

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory