» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மெக்னீசியம் சிலிக்கேட்டை பயன்படுத்த அனுமதி பெற்றுள்ளோம் : கே.எஃப்.சி. நிறுவனம் விளக்கம்

சனி 6, ஜூலை 2024 7:56:48 AM (IST)



தாங்கள் சமைக்கும் உணவுகளில் சிறந்த நடைமுறைகளையும் சர்வதேச தரத்தையும் கடைபிடித்து வருவதாக கே.எஃப்.சி. இந்தியா தெரிவித்துள்ளது.

மேலும் நாட்டில் உள்ள பிரபல சப்ளையர்களிடமிருந்து உயர்தர எண்ணெய் மற்றும் கோழிகள் பெறப்பட்டு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் மற்றும் இது சம்பந்தமான ஆணையங்கள் வகுத்துள்ள அனைத்து பொருந்தக்கூடிய பாதுகாப்பு மற்றும் தர தரநிலைகளை கடுமையாக பின்பற்றி வருகிறது.

சமீபத்தில் ஊடகங்களில் வந்த செய்தியை தெளிவுப்படுத்தும் வகையில், உணவு பொருட்களை சுத்தப்படுத்துவதற்கு மெக்னீசியம் சிலிக்கேட்டை பயன்படுத்துவதற்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அனுமதி அளித்துள்ளது மற்றும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய விதிகளின்படி, சமைத்த பிறகு, சமைப்பதற்கு முன் சுவை ஊட்டுவதற்காக மசாலா தடவி ஊற வைக்கப்பட்ட கோழி உட்பட கேஎப்சி-ல் உள்ள அனைத்தும் மிகவும் பாதுகாப்பனவையாகும்.

இந்த பிரச்சினை குறித்து விரைவான தீர்வு காண சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி வருகிறோம்.நாடு முழுவதும் கேஎப்சி உணவகங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் அனைத்து உணவுகளும் உயர் தரம் மற்றும் சாப்பிடுவதற்கு மிகவும் பாதுகாப்பானவை என்று நுகர்வோருக்கு நாங்கள் உறுதியளிக்கிறோம் என்று தெரிவித்துள்ளது. 


மக்கள் கருத்து

TUTYJul 8, 2024 - 11:43:17 AM | Posted IP 162.1*****

All KFG Branches have the same protocol to reuse the oil with magnesium Silicate , and the frozen meet. The local sellers have no idea about the refinery process..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory