» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ஜூன் 10 முதல் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் : ஆட்சியர் அறிவிப்பு!

சனி 8, ஜூன் 2024 3:32:21 PM (IST)

தூத்துக்குடியில் வருகிற 10ஆம் தேதி முதல் திங்கட்கிழமை தோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படும் என்று ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தேர்தல் நன்னடத்தை விதிகள் இந்திய தேர்தல் ஆணையத்தால் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதை தொடர்ந்து மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இனிவருங்காலங்களில் ஏற்கனவே நடைமுறையிலிருந்தவாறு அரசு விடுமுறைகள் இல்லாத ஒவ்வொரு திங்கட்கிழமை நாளன்றும் தொடர்ந்து நடத்தப்படும்.

அவ்வகையில் வரும் திங்கள் கிழமை அதாவது 10.06.2024 அன்று முற்பகல் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் பொது மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடத்தப்படும். அக்கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து சார்நிலை அலுவலகத்தை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொள்வார்கள். 

எனவே அன்றைய தினம் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திலுள்ள மக்கள் குறைதீர்க்கும் நாள் பிரிவில் பதிவு செய்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் நேரடியாக அளிக்கலாம் என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

கே.கணேசன்.Jun 8, 2024 - 09:16:03 PM | Posted IP 162.1*****

Welcome.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory