» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

அடிதடி வழக்குகளில் தொடர்புடைய 2பேர் குண்டர் சட்டத்தில் கைது!

சனி 18, மே 2024 5:01:30 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொலை முயற்சி, அடிதடி வழக்குகளில் தொடர்புடைய 2 வாலிபர்கள்  குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். 

நாகர்கோவில் புன்னை நகரை சேர்ந்தவர் நவீன்குமார் (30), தொழிலாளி. இவர் மீது நேசமணி நகர், கோட்டார் ஆகிய போலீஸ் நிலையங்களில் கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. எனினும் போலீசாரின் எச்சரிக்கையை மீறி இவர்கள் தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் நவீன்குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்பி சுந்தரவதனம் ஆட்சியர் ஸ்ரீதரிடம் பரிந்துரை செய்தார். 

அதனை ஆட்சியர் ஏற்றுக் கொண்டு நவீன்குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதேபோல சரலூர் பகுதியை சேர்ந்த அஜய் கண்ணன் (23) என்பவர் மீது நேசமணி நகர் காவல் நிலையத்தில் கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. அவரையும் எஸ்பி உத்தரவின் பேரில் குண்டர் சட்டத்தில்  கைது செய்ய ஆட்சியர் உத்தரவிட்டார். இதையடுத்து 2பேரையும் போலீசார் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.  இந்த ஆண்டில் மட்டும் குண்டர் சட்டத்தின் கீழ் இதுவரை மொத்தம் 23பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory