» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
விடுதிக்கு அழைத்துச் சென்று மாணவிக்கு பாலியல் தொல்லை: பிளஸ்-1 மாணவன் கைது
திங்கள் 13, மே 2024 8:36:04 AM (IST)
கன்னியாகுமரியில் விடுதிக்கு அழைத்துச் சென்று மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிளஸ்-1 மாணவனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். விடுதி உரிமையாளர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் சந்தேகத்துக்குரிய வகையில் இளம் ஜோடிகள் தங்கியிருப்பதாக நேற்று முன்தினம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் கன்னியாகுமரி இன்ஸ்பெக்டர் நெப்போலியன் தலைமையில் போலீசார் சம்பந்தப்பட்ட விடுதிக்கு சென்று அதிரடி சோதனை செய்தனர். அப்போது 3 அறைகளில் இளம்ஜோடிகள் தனிமையில் இருந்தனர்.
இதில் ஒரு ஜோடி 17 வயது நிரம்பியவர்கள் என்பதும் இருவருமே பிளஸ்-1 படித்து வருவதும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது. பின்னர் மகளிர் போலீசார் வரவழைக்கப்பட்டு அந்த மாணவி ஒப்படைக்கப்பட்டார். மற்ற 2 ஜோடிகளையும் எச்சரித்து அனுப்பினர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், விடுதியில் சிக்கிய மாணவன், மாணவி இருவரும் நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர்கள். இவர்கள் இடையே இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கம் காதலாக மாறியது. இருவரும் நேருக்கு நேர் சந்தித்து தீவிரமாக காதலித்து வந்தனர். இந்தநிலையில் இவர்களின் நண்பர்கள் கன்னியாகுமரிக்கு செல்வதாக கூறி உள்ளனர். அவர்களுடன் கன்னியாகுமரி வந்த இவர்கள் கடலில் குளித்து விட்டு பல்வேறு இடங்களை சுற்றி பார்த்தனர். பின்னர் விடுதியில் தங்கியுள்ளனர். தனிமையில் இருந்த மாணவியிடம், மாணவர் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து இருதரப்பு பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு போலீஸ் நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டனர்.
இதுகுறித்து மாணவி அளித்த புகாரின் பேரில் பிளஸ்-1 மாணவன் மீது கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அத்துடன் மாணவனை கைது செய்தனர். மேலும் இளம்சிறார், சிறுமிக்கு அறை ஒதுக்கீடு செய்ததாக சம்பந்தப்பட்ட விடுதி உரிமையாளர், மேலாளர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தீபாவளி விற்பனை களை கட்டியது: ரயில், பஸ் நிலையங்களில் கூட்டம் அலைமோதல்!
ஞாயிறு 19, அக்டோபர் 2025 10:41:28 AM (IST)

கொட்டாவி விட்டதால் திறந்த வாயை மூட முடியாமல் தவித்த வாலிபர்: ஓடும் ரயிலில் பரபரப்பு!
ஞாயிறு 19, அக்டோபர் 2025 10:29:36 AM (IST)

தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாட அனைத்து அவசர உதவிகளுக்கு ஒரே எண்!!
வெள்ளி 17, அக்டோபர் 2025 4:47:49 PM (IST)

நெல்லை, தூத்துக்குடி, குமரி உட்பட உள்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!
வெள்ளி 17, அக்டோபர் 2025 4:32:24 PM (IST)

குமரி மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழை: திற்பரப்பு அருவியில் குளிக்க தடை!
வெள்ளி 17, அக்டோபர் 2025 10:25:13 AM (IST)

குடியிருப்பு பகுதிக்கு வந்த மலைப்பாம்பு : பத்திரமாக மீட்ட வனத்துறையினர்!
வியாழன் 16, அக்டோபர் 2025 8:07:39 PM (IST)
