» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடியில் செல்போன் பறித்த 2பேர் கைது!
சனி 11, மே 2024 3:57:19 PM (IST)
தூத்துக்குடியில் இருசக்கர வாகனத்தில் சென்றவரை வழிமறித்து செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்து, பறித்துச் செல்லப்பட்ட செல்போனை பறிமுதல் செய்தனர்..
தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் திருவள்ளுவர் நகரை சேர்ந்த நாகூர் ஹனிபா மகன் அப்துல் ரஹீம் (21) என்பவர் நேற்று இரவு தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ஒரு பள்ளி அருகே இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது அங்கு வந்த மர்ம நபர்கள் மேற்படி அப்துல்ரஹீமை வழிமறித்து அவரிடமிருந்த செல்போன் மற்றும் வெள்ளிக் கொடியை பறித்துச் சென்றுள்ளனர்.இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் கேல்கர் சுப்ரமண்ய பால்சந்திரா மேற்பார்வையில் தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராம் மற்றும் தெர்மல்நகர் காவல் நிலைய தலைமை காவலர் மாணிக்கராஜ், முதல் நிலை காவலர் மகாலிங்கம், மத்தியபாகம் காவல் நிலைய முதல் நிலை காவலர் செந்தில், முத்தையாபுரம் காவல் நிலைய முதல் நிலை காவலர் சாமுவேல், காவலர் முத்துப்பாண்டி, தென்பாகம் காவல் நிலைய காவலர் திருமணிராஜன் ஆகியோர் அடங்கிய தூத்துக்குடி நகர உட்கோட்ட தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்
இதில், தூத்துக்குடி தாமோதரன் நகர் பகுதியைச் சேர்ந்த சங்கர் மகன் செல்வகுமார் (எ) யானை செல்வம் (27) மற்றும் தமிழ்மணி மகன் ஆனந்த்பாபு (24) ஆகிய இருவரும் சேர்ந்து மேற்படி அப்துல் ரஹீமிடம் செல்போன் மற்றும் வெள்ளி கொடியை பறித்து சென்றது தெரியவந்தது. உடனே தனிப்படை போலீசார் 2 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து திருடப்பட்ட ரூ.20,000 மதிப்பிலான செல்போன் மற்றும் ரூ.4,310 பணத்தை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து தென்பாகம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகம் அருகே தீவிபத்து
வியாழன் 4, டிசம்பர் 2025 4:55:50 PM (IST)

கோட்டாறு புனித சவேரியார் பேராலய திருவிழா தேர் பவனி : ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
புதன் 3, டிசம்பர் 2025 10:18:13 AM (IST)

காசி தமிழ் சங்கமம் வாராந்திர ரயிலை தினசரி ரயிலாக இயக்க பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை!
செவ்வாய் 2, டிசம்பர் 2025 4:11:22 PM (IST)

கிறிஸ்துமஸ் புத்தாண்டு: தற்காலிக பட்டாசு கடைகள் உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்!
செவ்வாய் 2, டிசம்பர் 2025 11:33:27 AM (IST)

மயக்க பிஸ்கட் கொடுத்து மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: பேருந்து ஓட்டுநர் கைது!
செவ்வாய் 2, டிசம்பர் 2025 10:24:12 AM (IST)

ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.25 லட்சம் மோசடி: வாலிபர் கைது!!
திங்கள் 1, டிசம்பர் 2025 8:51:56 PM (IST)


.gif)
Jebarajமே 13, 2024 - 08:45:21 PM | Posted IP 162.1*****