» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரியில் வாக்குச்சாவடி சீட்டு வழங்கும் பணி : ஆட்சியர் ஸ்ரீதர் துவக்கி வைத்தார்!

திங்கள் 1, ஏப்ரல் 2024 12:05:46 PM (IST)



கன்னியாகுமரி தொகுதியில் வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடி சீட்டு வழங்கும் பணியினை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் துவக்கி வைத்தார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி வரும் ஏப்ரல் 19ம் தேதி கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடத்துவதற்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. 

அதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தலில் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெட்டூர்ணிமடம், 84வது வாக்குச் சாவடியில் வாக்களிக்கவுள்ள பரமேஷ்வரன் தெருவைச்சார்ந்த வாக்காளர்களுக்கு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், வாக்குச்சாடி சீட்டினை இன்று (01.04.2024) வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் உதவி தேர்தல் அலுவலர் மற்றும் நாகர்கோவில் கோட்டாட்சியர் செல்வி.எஸ்.காளீஸ்வரி, அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் அனில்குமார், கிராமநிர்வாக அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory