» செய்திகள் - விளையாட்டு » உலகம்
அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு: தமிழக மாணவி உட்பட 4 பேர் பலி - கொலையாளி சுட்டுக்கொலை!
செவ்வாய் 3, மார்ச் 2026 5:00:56 PM (IST)

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஆஸ்டின் நகரில் உள்ள பொழுதுபோக்கு மையத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், தமிழகத்தைச் சேர்ந்த மாணவி உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஆஸ்டின் நகரில் உள்ள மக்கள் அதிகம் கூடும் பொழுதுபோக்கு மையத்திற்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர், அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாகத் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி தமிழக மாணவி உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த சவீதா சண்முகசுந்தரம் என்ற மாணவியும் ஒருவர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம், நிர்வாகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த இரட்டைப் பட்டப்படிப்பு பயின்று வந்தார்.
இன்னும் சில மாதங்களில் தனது படிப்பை முடிக்கவிருந்த நிலையில் இந்தத் துயரம் நிகழ்ந்துள்ளது. மேலும், அவர் அடுத்த வாரமே புதிய பணியில் சேரவிருந்தார் என்ற உருக்கமான தகவல் வெளியாகியுள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை போலீசார் சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொன்றனர். விசாரணையில் அவர் செனகல் நாட்டைச் சேர்ந்த அமெரிக்கக் குடிமகனான நிடியாகா டியாக்னே (54) என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல் ஒரு திட்டமிட்ட பயங்கரவாதத் தாக்குதலாக இருக்கலாம் என போலீசார் சந்தேக்கின்றனர். இது தொடர்பாக அமெரிக்கப் புலனாய்வுத் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியா - இத்தாலி உறவில் புதிய சகாப்தம்: மோடி - ஜார்ஜியா மெலோனி கூட்டு அறிக்கை!
புதன் 20, மே 2026 4:52:04 PM (IST)

நார்வே பெண் நிருபரின் கேள்விக்குப் பதிலளிக்காமல் சென்றார் பிரதமர் மோடி! – ராகுல் காந்தி சாடல்!
செவ்வாய் 19, மே 2026 3:39:00 PM (IST)

உளவுத்துறை எச்சரிக்கை எதிரொலி: குப்பையில் வீசப்பட்ட சீன அரசின் பரிசு பொருட்கள்!
திங்கள் 18, மே 2026 5:40:25 PM (IST)

ஐரோப்பியப் பயணம் தொடக்கம்: நெதர்லாந்து சென்றடைந்தார் பிரதமர் மோடி - உற்சாக வரவேற்பு!
சனி 16, மே 2026 12:25:34 PM (IST)

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக அனைத்து வர்த்தகக் கப்பல்களுக்கும் அனுமதி: ஈரான் அறிவிப்பு
வெள்ளி 15, மே 2026 4:47:36 PM (IST)

எரிசக்தி பாதுகாப்பில் புதிய மைல்கல்: பிரதமரின் யுஏஇ பயணத்தில் 5 முக்கிய ஒப்பந்தங்கள்!
வெள்ளி 15, மே 2026 3:41:49 PM (IST)


