» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்: பாகிஸ்தான் துணை பிரதமர் விருப்பம்!

சனி 30, ஆகஸ்ட் 2025 5:43:51 PM (IST)



இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் துணை பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இஷாக் தார் தெரிவித்துள்ளார்.

இந்தியா - பாகிஸ்தான் இடையே நீண்டகாலமாகவே பிரச்னை இருந்து வருகிறது. பிரச்னைகள் முடிவிலாமல் நீண்டுகொண்டே இருக்கும்நிலையில், இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக அந்நாட்டு துணை பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இஷாக் தார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் பிச்சை எடுக்காது. இருப்பினும், இந்தியாவுடனான அனைத்து பிரச்னைகளிலும் கண்ணியமான முறையில் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் தயாராக உள்ளது. ஜம்மு - காஷ்மீர் பிரச்னை உள்பட அனைத்து பிரச்னைகளிலும் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளது.

இந்தியாவுடனான மோதலில், வான் மற்றும் நிலத்திலும் பாகிஸ்தான் தங்கள் வலிமையை நிரூபித்தது. மேலும், தங்கள் மீதான எந்தவொரு ஆத்திரமூட்டலுக்கும் முழுமையான பதிலளிக்கப்படும் என்று எச்சரித்தது. கடல்வழியாகக்கூட இந்தியாவுக்கு முழு பலத்துடன் பதிலடி பாகிஸ்தான் தயாராக உள்ளது என்று தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory