» செய்திகள் - விளையாட்டு » உலகம்
டிரம்ப் விதித்த வரிகள் சட்டவிரோதமானவை: அமெரிக்க நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
சனி 30, ஆகஸ்ட் 2025 12:03:39 PM (IST)
டிரம்ப் விதித்த வரிகள் சட்டவிரோதமானவை, இத்தகைய வரிகளை விதிக்க அவருக்கு அதிகாரம் இல்லை என்று அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்றுக் கொண்ட டொனால்டு டிரம்ப், பொருளாதார ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக உலக நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிக்கும் அறிவிப்பை டிரம்ப் வெளியிட்டார். இதன்படி இந்தியாவுக்கு 25 சதவீத வரியை டிரம்ப் விதித்தார்.
அத்துடன், உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால், கூடுதலாக 25 சதவீத வரியை டிரம்ப் அறிவித்தார். அதன்படி, இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மொத்தமாக 50 சதவீத வரி விதிக்கப்பட்டது. இந்த வரி விதிப்பு கடந்த 27-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
ஆனால், வர்த்தக வரி விதிப்பு தொடர்பாக அமெரிக்காவின் நிர்பந்தத்திற்கு அடிபணிய மாட்டோம். எவ்வளவு நெருக்கடிகள் வந்தாலும் இந்திய விவசாயிகள், சிறு வணிகர்களை பாதிக்க விட மாட்டேன் என்று பிரதமர் மோடி திட்டவட்டமாக கூறிவிட்டார். அமெரிக்காவின் வரி விதிப்பால் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்படும் பாதிப்பை சரிகட்ட மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதற்கிடையில், டிரம்ப்பின் வரிவிதிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் உள்ள வர்த்தக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள், டிரம்ப் பிறப்பித்துள்ள உத்தரவுகள் அவரின் அதிகார மீறலாகும் என்று விமர்சித்து, அனைத்து உத்தரவுகளும் நிரந்தரமாக ரத்து செய்வதாக தெரிவித்தனர். இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் அமெரிக்க அரசு மனு தாக்கல் செய்தது.
இந்த மனுவை விசாரித்த மேல்முறையீட்டு நீதிமன்றம், அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த வரிகள் சட்டவிரோதமானவை என்றும், இத்தகைய வரிகளை விதிக்க டிரம்ப்புக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று அதிரடியாக தீர்ப்பு அளித்துள்ளது. தேசிய அவசர நிலையை அறிவிக்கவோ, அல்லது உலகில் உள்ள அனைத்து நாடுகள் மீதும் வரிகளை விதிக்கவோ டிரம்ப்புக்கு அதிகாரம் இல்லை என நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.
இந்த உத்தரவின் மூலம், இந்தியா மீது டிரம்ப் விதித்த வரிகள் ரத்தாகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இருப்பினும், அனைத்து வரிகளும் தொடர்ந்து அமலில் உள்ளதாக டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும், அமெரிக்கா இறுதியில் வெற்றி பெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டிராகனும், யானையும் இணைய வேண்டும்: பிரதமர் மோடியிடம் சீன அதிபர் பேச்சு!
ஞாயிறு 31, ஆகஸ்ட் 2025 1:52:40 PM (IST)

இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்: பாகிஸ்தான் துணை பிரதமர் விருப்பம்!
சனி 30, ஆகஸ்ட் 2025 5:43:51 PM (IST)

ஜப்பான் சுற்றுப்பயணம் நிறைவு: சீனா புறப்பட்டார் பிரதமர் மோடி; ஷாங்காய் மாநாட்டில் பங்கேற்பு
சனி 30, ஆகஸ்ட் 2025 4:53:11 PM (IST)

கம்போடியா எல்லைப் பிரச்சினை உரையாடல் கசிவு : தாய்லாந்து பெண் பிரதமர் பதவி நீக்கம்
வெள்ளி 29, ஆகஸ்ட் 2025 5:20:23 PM (IST)

ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு: சீன, ரஷ்ய தலைவர்களுடன் சந்திப்பு!
வெள்ளி 29, ஆகஸ்ட் 2025 10:41:28 AM (IST)

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு இந்தியா உதவுகிறது: ட்ரம்பின் ஆலோசகர் சொல்கிறார்
வியாழன் 28, ஆகஸ்ட் 2025 3:51:35 PM (IST)
