» செய்திகள் - விளையாட்டு » உலகம்
சீனாவில் கட்டுமான பணியின்போது ரயில்வே பாலம் இடிந்து 12 தொழிலாளர்கள் பலி
ஞாயிறு 24, ஆகஸ்ட் 2025 10:39:36 AM (IST)

சீனாவில் கட்டுமான பணியின்போது ரயில்வே பாலம் இடிந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்தனர்.
சீனாவின் குயிங்காய் மாகாணத்தில் மஞ்சள் ஆறு பாய்கிறது. இந்த ஆற்றின் மீது மிகப்பெரிய ரயில்வே பாலம் கட்டப்பட்டு வருகிறது.2 கிலோ மீட்டர் தூரமுள்ள இந்த பாலம் கட்டுமான பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது திடீரென அந்த பாலம் இடிந்து விழுந்தது.
இதனால் அங்கு வேலை பார்த்துக்கொண்டிருந்த தொழிலாளர்கள் ஆற்றில் விழுந்தனர். இதுகுறித்து மீட்பு படையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் அங்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த ஆற்றில் இருந்து 12 பேர் பிணமாக கண்டெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு அந்த நாட்டின் அதிபர் ஜின்பிங் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தில் மேலும் 4 பேர் ஆற்றில் விழுந்து மாயமாகி இருப்பதாக கூறப்படுகிறது. எனவே ஹெலிகாப்டர், படகு மூலம் அவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். கட்டுமான பணியின்போதே பாலம் இடிந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே இதற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஜெர்மனியில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ரூ.3,819 கோடிக்கு 23 ஒப்பந்தங்கள் கையெழுத்து!
புதன் 3, செப்டம்பர் 2025 10:44:40 AM (IST)

கச்சத்தீவை எக்காரணம் கொண்டும் விட்டுக்கொடுக்க மாட்டோம்: இலங்கை அதிபர் திட்டவட்டம்
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 4:36:59 PM (IST)

அமெரிக்க - இந்திய உறவு புதிய உச்சம் எட்டுகிறது: அமெரிக்க வெளியுறவு செயலர் தகவல்
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 12:42:00 PM (IST)

ஆப்கானிஸ்தானில் மிக மோசமான நிலநடுக்கம்: பலி 800 ஆக அதிகரிப்பு; 4500+ காயம்
திங்கள் 1, செப்டம்பர் 2025 4:43:39 PM (IST)

போர் நெருக்கடியை தீர்க்க முயற்சி: இந்தியா, சீனா தலைவர்களுக்கு புதின் பாராட்டு!
திங்கள் 1, செப்டம்பர் 2025 12:50:51 PM (IST)

ஷாங்காய் மாநாட்டில் பஹல்காம் தாக்குதலுக்கு எதிராக தீர்மானம் : பாகிஸ்தான் பிரதமர் பங்கேற்பு
திங்கள் 1, செப்டம்பர் 2025 12:19:14 PM (IST)
