» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ஹமாஸ் இயக்கத்தை ஒழித்துக்கட்டி காசாவை விடுவிப்பதுதான் இலக்கு : இஸ்ரேல் பிரதமர்
திங்கள் 11, ஆகஸ்ட் 2025 11:09:25 AM (IST)
காசாவை ஆக்கிரமிப்பது எங்கள் நோக்கமல்ல. ஹமாஸ் இயக்கத்தை ஒழித்துக்கட்டி காசாவை விடுவிப்பதுதான் இலக்கு என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.
இஸ்ரேல் ராணுவத்துக்கும், காசாவில் உள்ள ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இடையே பல மாதங்களாக சண்டை நடந்து வருகிறது. காசா மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராகி வருகிறது. அதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.இந்நிலையில், நேற்று பேட்டி அளித்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியதாவது: காசா பகுதியில் பொதுமக்கள் கொல்லப்படுதல், சேதம், உதவிப்பொருட்கள் கிடைக்காதது என அனைத்துக்கும் ஹமாஸ் இயக்கம்தான் காரணம். காசாவில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை குறுகிய காலத்தில் முடிக்க திட்டமிட்டுள்ளோம்.
ஹமாஸ் இயக்கத்தை ஒழித்துக்கட்டி, வேலையை முடிப்பதை தவிர வேறு வழியில்லை. காசாவை ஆக்கிரமிப்பது எங்கள் நோக்கமல்ல. அதை விடுவிப்பதுதான் இலக்கு. ஆனால், இஸ்ரேலுக்கு உள்ளேயும், வெளியேயும் சர்வதேச அளவில் பொய் பிரசாரம் நடந்து வருகிறது. காசாவை ராணுவமயத்தில் இருந்து விடுவித்தல், இஸ்ரேல் ராணுவம் பாதுகாப்பை மேற்கொள்ளுதல், இஸ்ரேல் அல்லாத சிவில் நிர்வாகம் பொறுப்பேற்றல் ஆகியவைதான் எங்கள் இலக்குகள். இவ்வாறு அவர் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரஷ்ய எண்ணெய் நிறுவனங்கள் மீது பொருளாதார தடை விதித்தது அமெரிக்கா
வியாழன் 23, அக்டோபர் 2025 4:21:51 PM (IST)

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் மோதலுக்கு இந்தியா காரணமா? ஆப்கானிஸ்தான் பதிலடி
புதன் 22, அக்டோபர் 2025 12:24:10 PM (IST)

ஜப்பானின் முதல் பெண் பிரதமராக சனே தகைச்சி தேர்வு!
செவ்வாய் 21, அக்டோபர் 2025 5:20:01 PM (IST)

வர்த்தக ஒப்பந்தம் செய்யாவிட்டால் 155 சதவீதம் வரி: சீனாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை!
செவ்வாய் 21, அக்டோபர் 2025 12:53:30 PM (IST)

ஆப்கானிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்: 3 கிரிக்கெட் வீரர்கள் உள்பட 8 பேர் பலி
சனி 18, அக்டோபர் 2025 10:46:45 AM (IST)

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக மோடி உறுதி கூறினார்: டிரம்ப் பேட்டி!
வியாழன் 16, அக்டோபர் 2025 3:31:02 PM (IST)


.gif)