» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஆப்கானிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்: 3 கிரிக்கெட் வீரர்கள் உள்பட 8 பேர் பலி

சனி 18, அக்டோபர் 2025 10:46:45 AM (IST)



ஆப்கானிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் நடத்திய வான்வழி  தாக்குதலில் 3 கிரிக்கெட் வீரர்கள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர்.

ஆப்கானிஸ்தான்–பாகிஸ்தான் இடையே எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது. எல்லையில் இரு நாட்டு படைகளும் கடுமையாக மோதிக்கொண்டன. இதில் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன. இதையடுத்து, சண்டை நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் 48 மணி நேரம் சண்டை நிறுத்தம் செய்ய ஒப்புக்கொள்ளப்பட்டது.

எனினும், சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் எல்லையில் தாக்குதல் நடத்துவதாக சொல்லப்படுகிறது. அந்த வகையில், ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் பாகிஸ்தான் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள பக்டிகா மாகாணத்தில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர். இதில் 3 பேர் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் ஆவர்.

இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியிருப்பதாவது: "நட்புறவான போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் எல்லையில் உள்ள கிழக்கு பக்டிகா மாகாணத்தில் உள்ள உர்குனில் இருந்து ஷரானாவுக்கு வீரர்கள் பயணம் செய்தனர். பின்னர் உர்குனுக்கு திரும்பிய பிறகு, அவர்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் கோழைத்தனமான இந்த தாக்குதலை நடத்தியுள்ளது” என்று தெரிவித்துள்ளது.

முன்னதாக, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று நாடுகள் பங்கேற்க இருந்த முத்தரப்பு தொடரில் இருந்து விலகுவதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. பாதிக்கப்பட்டவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டோம் என்று ஆப்கானிஸ்தான் கூறியிருந்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory