» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக மோடி உறுதி கூறினார்: டிரம்ப் பேட்டி!

வியாழன் 16, அக்டோபர் 2025 3:31:02 PM (IST)



ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம் உறுதி அளித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், "இந்திய பிரதமர் மோடி எனது நண்பர். எங்களுக்குள் சிறந்த உறவு இருக்கிறது. இந்தியா ரஷியாவின் எண்ணெய் வாங்குவதில் எனக்கு மகிழ்ச்சியில்லை. மேலும், ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்க மாட்டோம் என்று என்னிடம் இன்று உறுதியளித்தார். சீனாவையும் இதனைச் செய்ய வைக்க வேண்டும்.

ரஷியா அபத்தமான போரைத் தொடர்கிறது. லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ரஷியாவும் ராணுவ வீரர்கள் உள்பட லட்சக்கணக்கானோரை இழந்துள்ளது. இந்த போர் தொடங்கியிருக்கவே கூடாது. முதல் வாரத்திலேயே ரஷியா வெற்றி பெற்றிருக்க வேண்டியது, ஆனால், நான்காவது ஆண்டை அடைந்துள்ளார்கள். போர் நிறுத்தத்தை காண நான் விரும்புகிறேன். எனவே இந்தியா எண்ணெய் வாங்குவதில் நான் மகிழ்ச்சியடையவில்லை.

மத்திய கிழக்கில் கடந்த வாரம் நாங்கள் செய்ததை ஒப்பிடும்போது இது எளிதானது என்பது உங்களுக்கு தெரியும். அது 3,000 ஆண்டுகள் பிரச்னை. ஆனால், இது வெறும் 3 ஆண்டு போர் மட்டுமே. நாங்கள் ரஷியா - உக்ரைன் போரை நிறுத்திக் காட்டுவோம். அதிபர் புதின் போரை நிறுத்துவார் என்று நினைக்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory