» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ரஷ்ய எண்ணெய் நிறுவனங்கள் மீது பொருளாதார தடை விதித்தது அமெரிக்கா
வியாழன் 23, அக்டோபர் 2025 4:21:51 PM (IST)

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்யாவின் மிகப்பெரிய 2 எண்ணெய் நிறுவனங்கள் மீது பொருளாதார தடை விதித்துள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
உக்ரைனில் ரஷ்யா நடத்தி வரும் போரை முடிவுக்கு கொண்டுவர, அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சி செய்து வருகிறார். தற்போது ரஷ்யாவின் இரண்டு பெரிய எண்ணெய் நிறுவனங்களான ரோஸ்நெப்ட் மற்றும் லுகோயில் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அதிபர் டிரம்ப் கூறியதாவது: இவை மிகப்பெரிய தடைகள். அவர்களின் இரண்டு மிகப்பெரிய எண்ணெய் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை நீண்ட நாட்கள் நீடிக்காது என்று நாங்கள் நம்புகிறோம். போர் விரைவில் தீர்க்கப்படும், என்றார்.
அமெரிக்க கருவூலத் துறையின் வெளிநாட்டு சொத்துக் கட்டுப்பாட்டு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''நிரந்தர அமைதி ரஷ்யாவை பொறுத்தது. இன்றைய நடவடிக்கைகள் ரஷ்யாவின் எரிசக்தி துறைகள் மீது அழுத்தத்தை அதிகரிக்கிறது. ரஷ்யாவின் பொருளாதாரத்தில் பலவீனத்தை ஏற்படுத்தும். அமெரிக்கா தொடர்ந்து ராஜதந்திர தீர்வை பின்பற்றுவதில் உறுதியாக உள்ளது. நிரந்தர அமைதி முற்றிலும் ரஷ்யாவின் நல்லெண்ண பேச்சுவார்த்தையை பொறுத்தது" இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் மோதலுக்கு இந்தியா காரணமா? ஆப்கானிஸ்தான் பதிலடி
புதன் 22, அக்டோபர் 2025 12:24:10 PM (IST)

ஜப்பானின் முதல் பெண் பிரதமராக சனே தகைச்சி தேர்வு!
செவ்வாய் 21, அக்டோபர் 2025 5:20:01 PM (IST)

வர்த்தக ஒப்பந்தம் செய்யாவிட்டால் 155 சதவீதம் வரி: சீனாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை!
செவ்வாய் 21, அக்டோபர் 2025 12:53:30 PM (IST)

ஆப்கானிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்: 3 கிரிக்கெட் வீரர்கள் உள்பட 8 பேர் பலி
சனி 18, அக்டோபர் 2025 10:46:45 AM (IST)

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக மோடி உறுதி கூறினார்: டிரம்ப் பேட்டி!
வியாழன் 16, அக்டோபர் 2025 3:31:02 PM (IST)

சீன அரசு அதிகாரிகளுடன் ரகசிய தொடர்பு : இந்திய வம்சாவளி ஆலோசகர் அமெரிக்காவில் கைது
புதன் 15, அக்டோபர் 2025 11:48:01 AM (IST)
